பம்பரமா சுழலவிட்ட கலெக்டர்

Added : செப் 19, 2021
Share
Advertisement
ப.பேட்டை, கோல்டன் சிட்டி தாலுகாக்களில் 55 சதவீதம் பேர் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டாங்க; 45 சதவீதம் பேர் போட்டுக்கல.மெத்த படிச்சவங்க, பொது அறிவு உள்ளவங்க இருக்கிற இவ்விரண்டு தாலுகா மீதும் மாவட்ட கலெக்டர் சிறப்பு கவனம் செலுத்தினாரு. ஆபிசர்களை, மக்கள் பிரதிநிதிகளை, பம்பரமா சுழலவிட்டாரு. சரியா வேலை வாங்கினாரு. இதனால்கோல்டு சிட்டிக்குள் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு


ப.பேட்டை, கோல்டன் சிட்டி தாலுகாக்களில் 55 சதவீதம் பேர் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டாங்க; 45 சதவீதம் பேர் போட்டுக்கல.மெத்த படிச்சவங்க, பொது அறிவு உள்ளவங்க இருக்கிற இவ்விரண்டு தாலுகா மீதும் மாவட்ட கலெக்டர் சிறப்பு கவனம் செலுத்தினாரு. ஆபிசர்களை, மக்கள் பிரதிநிதிகளை, பம்பரமா சுழலவிட்டாரு. சரியா வேலை வாங்கினாரு.

இதனால்கோல்டு சிட்டிக்குள் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட செய்தாரு. இதில் முனிசிபாலிடி தலைவரு தலைமையில் தீவிரம் காட்டினாங்க.சூரியன் உதிக்கும் முன் வீட்டிலிருந்து வெளியேறி இரவு 9:00 மணிக்கு பெறகு வீடு திரும்புகிறவங்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு இல்லாமல் போனதாலே டெய்லி டிராவலர்ஸ் மிஸ் ஆகியிருக்காங்க. இவங்களுக்கு இரவு நேரத்திலும் தடுப்பூசி போட உத்தரவு போட்டிருக்காரு.சொல்ல துடிக்குது மனசு!மைன்ஸ் செக்யூரிட்டி கார்டு பணிக்கு கான்டிராக்ட் விடப்பட்டிருக்கு. உள்ளூரு காரங்களுக்கு தான் வேலை கொடுத்திருக்காங்க.

ஆனால், இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் தர வேண்டியவங்க, 25 நாட்களை கடந்து தான் வேண்டா வெறுப்பா தர்மத்துக்கு பிச்சை போடுவது போல தராங்களாம்.ஏன் எதுக்கு சம்பளம் லேட்டுன்னு, கேள்வி கேட்கிறவங்களுக்கு அடுத்த நாள் முதல் வேலையே கிடையாதுங்கிற மிரட்டல் இருப்பதால், இருக்கிற வேலையை பாதுகாத்து கொள்ள வாய்பொத்தி வேலை செய்து வர்ராங்களாம்.சீப் ஆபிசருக்கு மாதா, மாதம் ஒப்பந்ததாரரின் 'சம்திங் கவர்' மிஸ் இல்லாமல் போய் சேர்ந்திடுதாம். அதனால் மற்ற காவலர்களை ஸ்லேவ் போல நெனச்சி, உரிய நாளில் சம்பளம் வழங்காமல் பசியால்வாட வைக்கிறாங்கன்னு சொல்ல முடியாமல் தவிக்கிறாங்களாம்.

முதல் கட்ட பேச்சு தோல்வி!கை கட்சியில் 'மாஜி' முனிக்கும், 'மாஜி' சபாநாயகருக்கும் சீனிவாசப்பூர் அசம்பிளி காரருக்கும், ஏற்பட்டுள்ள விரிசலை சரிப்படுத்த கோலார் மாவட்ட தலைவர்களோடு, பிரச்னைக்குரிய ரெண்டு பெர்ர்ய தலைவர்களையும் அழைத்து மாநில தலைவர் சமாதானப் படுத்த மீட்டிங் நடத்தினாரு.ரெண்டு பேருமே பிடியை விட்டு தராமல், ஒருத்தர் மேல் இன்னொருத்தர் துரோகம் செய்து சேற்றை வாரி, வீசி, பூசினர்.ஒரு 'மாஜி'க்கு ஆதரவா ப.பேட்டைகாரரும், கோல்டு சிட்டியோட மண்ணின் மைந்தரும் பேசினாங்க. மற்றொரு 'மாஜி'க்கு ஆதரவா அவரது மகளும், மாலுார்காரரும் பேசினாங்க. 2 பேருமே ஒண்ணு கூடினால் தான் கைக்கு இடம் கிடைக்கும்னு சொல்லி இருக்காங்க.இருவரை சமாதானப்படுத்தும் முதல் ரவுண்டு ஒத்துப்போகல.

ரெண்டாவது கட்ட பேச்சு 'மாஜி' சி.எம்., தலைமையில் கூடுதாம். அப்போதாவது ஒத்துப் போவாங்களான்னு எதிர்ப்பாக்றாங்க.உருவாகுமா ராஜகோபுரம்!இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோல்டு சிட்டியோட நுாற்றாண்டு ஓல்டு கோவில் ரா.பேட்டை கீதா சாலையில் அமைந்துள்ளது.பல சமுதாயத்தினரின் கூட்டு முயற்சியோடு, பிரம்மோற்சவமும் நடத்தப்படுகிறது. எல்லா சமுதாயத்தினரின் பங்காக விழா, நடக்கிறது.இக்கோவிலோட ராஜ கோபுரம் கட்டுவதற்கு, ஒரு சமுதாய பிரம்மோற்சவ குழுவினர் முன் வந்தாங்க. கட்டடவல்லுனர்களின் வரைப்படம் தயார் செய்தாங்க.

இடையில், சிலர் தலையிட்டு, கத்திரி போட்டுட்டாங்களாம்.இதனால் பிரமாண்டமாக உருவாக இருந்த அடிக்கல் நாட்டு பூஜை நடக்காமல் போயிருக்கு. இப்புடி குழப்பம் செய்து நடத்த விடாமல் தடுத்திட்டாங்களேன்னு சில சமுதாயத்தினர் அங்கலாய்க்கிறாங்க.ராஜ கோபுரம் உருவாகுமா, இதுக்கு அரசு அனுமதி தருமான்னு எதிர்ப்பார்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X