மாமல்லபுரம்,-தமிழக புதிய கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை குடும்பத்தினருடன் மாமல்லபுரம் வந்தார்.கடற்கரை கோவிலுக்கு 5:15 மணிக்கு வந்த அவரை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து, கற்கோவிலை கண்டு களித்த அவர், கி.பி., 7ம் நுாற்றாண்டு கட்டடக் கலை வகையாக, பல்லவர்கள் கட்டிய கோவிலின் சரித்திர பின்னணியை கேட்டறிந்து வியந்தார்.பின், சுற்றுலா வளர்ச்சிக் கழக கடற்கரை விடுதி சென்றார். அங்கு சிற்றுண்டி சாப்பிட்டார். கடற்கரையை ரசித்து விட்டு, சென்னை புறப்பட்டார். போலீஸ் எஸ்.பி., விஜயகுமார், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அரசு உயரதிகாரிகள், அலுவலக பணி மற்றும் சுற்றுலா என வந்தால், தனியார் கடற்கரை விடுதியில் தங்குவர். முந்தைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அரசு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியில் சாப்பிட்டார். அதேபோல இவரும், அரசு விடுதியையே பயன்படுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE