இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்போலீஸ் ஸ்டேஷனில் மாணவி தஞ்சம்நாமக்கல்:நாமகிரிப்பேட்டையில் மாயமான, 'நீட்' தேர்வு எழுதிய மாணவி, உத்தமபாளையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை சேர்ந்த, 19 வயது மாணவி, கடந்த, 12ல் நீட் தேர்வு எழுதி உள்ளார்.நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்,



தமிழக நிகழ்வுகள்




போலீஸ் ஸ்டேஷனில் மாணவி தஞ்சம்



நாமக்கல்:நாமகிரிப்பேட்டையில் மாயமான, 'நீட்' தேர்வு எழுதிய மாணவி, உத்தமபாளையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை சேர்ந்த, 19 வயது மாணவி, கடந்த, 12ல் நீட் தேர்வு எழுதி உள்ளார்.நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள், மகளின் தோழி வீடு என, பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகார்படி தனிப்படை போலீசார் மாணவியை தேடி வந்தனர்.

இது குறித்து, எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் கூறியதாவது:மாணவி காணாமல் போனதால் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி தேடும் பணியை மேற்கொண்டோம். தேனி மாவட்டம், உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த தகவல் கிடைத்தது. அவர் திருமணம் செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.



latest tamil news



பரோட்டா மாஸ்டர் கொலை நான்கு பேர் அதிரடி கைது



செங்கம்:செங்கம் அருகே பரோட்டா மாஸ்டரை வெட்டி கொன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அடுத்த வீரானந்தல்லை சேர்ந்தவர் வெங்கடேசன், 24; பரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ரத்தினம், 20. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 2018ல், ஜி.என்.பாளையத்தை சேர்ந்த மதுசூதனன், 33 என்பவரின் கையை, வெங்கடேசன் வெட்டி துண்டித்தார். இதில் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, புதுப்பாளையத்தில் வெங்கடேசன் நடந்து சென்றார்.அவரை பின் தொடர்ந்த மதுசூதனன் மற்றும் அவரது நண்பர்கள் சுரேஷ், 30; ஏழுமலை, 26; வல்லரசு, 24; வசந்த், 25; வினோத், 27; ஆகிய ஆறு பேர், வெட்டி கொன்றனர். புதுப்பாளையம் போலீசார் விசாரித்து, மதுசூதனன் மற்றும் மூவரை கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.


வீட்டின் முன் 'உச்சா' முதியவர் அடித்து கொலை



சங்கர் நகர் : அனகாபுத்துார் அருகே, வீட்டின் முன் சிறுநீர் கழித்ததால் கட்டையால் தாக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அனகாபுத்துார், கரிகாலன் நகர், செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 40; எலக்ட்ரீஷியன். இவரது மாமனார் ராஜேந்திரன், 70.கடந்த 10ம் தேதி இரவு, சுரேஷின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் சீனிவாசன், 54, என்பவர் வீட்டின் முன், ராஜேந்திரன் சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால், ராஜேந்திரனை சீனிவாசன் ஆபாசமாக பேசியுள்ளார். ராஜேந்திரன் பதிலுக்கு சீனிவாசனை அடித்துள்ளார்.ஆத்திரமடைந்த சீனிவாசன், கீழே கிடந்த கட்டையால் தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்த சங்கர் நகர் போலீசார், சீனிவாசனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து, சீனிவாசன் மீது பதிந்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.


மனைவியின் கள்ளக்காதலனை வெளுத்து வாங்கிய கணவர்



அபிராமபுரம் : மந்தைவெளி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத், 27; ஓட்டல் ஊழியர்.

இவரது மனைவி லோகேஷ்வரி, 22. இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணியளவில், வினோத் சொந்த ஊர் செல்வதற்காக புறப்பட்டு சென்றார். சிறிது துாரம் சென்றவுடன், வீட்டில் எடுத்து வைத்திருந்த புது சட்டையை எடுத்து வர திரும்பினார்.அப்போது, மனைவி இன்னொருவருடன் உடலுறவு கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த வினோத், அந்த நபரை வெளுத்து வாங்கினார்.பின், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அபிராமபுரம் போலீசாரிடம் மனைவியின் கள்ளக்காதலனை ஒப்படைத்தார்.விசாரணையில், ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த மனோஜ், 23, என்பது தெரியவந்தது.


மின்னல் தாக்கி அண்ணன் பலி தம்பி காயம்



ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரராகவன் மகன் ஹரிஹரன், 24. பி.ஏ., பட்டதாரியான இவர், வேலை தேடி வருகிறார்.

இவரது தம்பி அரவிந்தன் கல்லுாரி மாணவர்.இருவரும் வீட்டின் ஜன்னல் ஓரம் நேற்று முன்தினம் இரவு படுத்து துாங்கினர். அப்போது இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.எதிர்பாராத விதமாக வீட்டின் ஜன்னல் வழியே மின்னல் தாக்கியதில், பலத்த காயமடைந்த ஹரிஹரன், மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்; அரவிந்தன் பலத்த காயங்களுடன், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.இவர்கள் வீட்டின் வெளியே இருந்த மூன்று பசுக்களும் மின்னல் தாக்கி பலியாகின. ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


வெடி தயாரித்த இருவர் கைது



சாத்துார்--வெம்பக்கோட்டை எஸ்.ஐ., சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது விஜயகரிசல்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் 30, சிலம்பரசன், 34, ஆகியோர் வீட்டின் அருகில் தகர செட்டில் வைத்து எளிதில் தீ பற்றக்கூடிய சோல்சா வெடிகளை தயாரித்தது தெரியவந்தது. சோல்சா , வெடி தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


latest tamil news



இந்திய நிகழ்வுகள்



நீரில் மூழ்கி சிறுமி உள்பட 7 பெண்கள் பலி


ஜார்க்கண்ட் : விஸ்வகர்மா சிலையை கரைத்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 7 பெண்கள் பலியானார்கள்.

நாம் நவராத்திரி கடைசி நாளில் சரஸ்வதி - ஆயுத பூஜை கொண்டாடுவதுபோல், வட இந்திய மாநிலங்களான, திரிபுரா, அசாம், பீகார், ஜார்கண்ட், மே.வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி முடிந்த பிறகு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை விழாவுக்கு 'விஸ்வகர்மா பூஜை' என்று பெயர். அதில் விஸ்வகர்மா சிலையை கரைக்கச் சென்ற போது ஒரு சிறுமி உட்பட 7 பெண்கள் நீரில் மூழ்கி பலியானது பக்தர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி



லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 30 பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 5.30 மணியளவில் சூரஜ்பூரில் உள்ள தில்படா பகுதியில் சென்ற போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 20 வயது நிரம்பிய இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


உலக நிகழ்வுகள்




ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் மாணவிகளுக்கு தடை



காபூல்:ஆப்கானிஸ்தான் முழுவதும் அனைத்து பள்ளிகளையும் திறக்க தலிபான்கள் உத்தரவிட்டனர். பள்ளிகளில் மாணவிகளுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர். தலிபான் அரசு இருக்காது பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும்' என தலிபான்கள் உறுதி கூறினர். தற்போது அதற்கு மாறாக கல்வியில் பெண்களுக்கான உரிமையை மறுத்து வருகின்றனர். இதுகுறித்து சர்வதேச சமூகம், ஆப்கன் பெண்களின் கல்வி மற்றும் வேலை குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளது.


'ட்ரோன்' தாக்குதல்: அமெரிக்கா வருத்தம்



வாஷிங்டன்:' ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சமீபத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க ராணுவத்தினர் 13 பேர் உட்பட 183 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து காபூல் விமான நிலையம் நோக்கி வந்த ஒரு வாகனம் மீது ஆளில்லா விமானத்தின் மூலமாக அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏழு சிறுவர்கள் உட்பட 10 பேர் பலியாயினர்.

விமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது.இறுதியாக கிடைத்த தகவல்களை பல முனைகளில் ஊர்ஜிதப்படுத்திய பிறகே, அந்த வாகனத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தினோம். அதன் பின்தான் வாகனத்தில் வந்தவர்கள் அப்பாவிகள் என, தெரிய வந்தது. தாக்குதல் நடத்தியதற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அரசு உதவும் என தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X