பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சு வயசு சிறுவனின் திறமை

Added : செப் 19, 2021
Share
Advertisement
உலகிலுள்ள, 195 நாடுகளின் கொடிகளையும் கண்டுபிடித்து, வரைந்து, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்துள்ளார், கோவையை சேர்ந்த, 5 வயது சிறுவன்.கோவை, சித்தாபுதுார் பகுதியை சேர்ந்த நவின் காகு - கரோலின் ரெபேக்கா தம்பதி மகன் ஜேசன் நெட்டானியல் காகு. ஐந்தே வயதான இச்சிறுவன், வீட்டில் இருந்தபடியே, ஒன்றாம் வகுப்பு படிக்கிறான்.சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த
 அஞ்சு வயசு சிறுவனின்  திறமை

உலகிலுள்ள, 195 நாடுகளின் கொடிகளையும் கண்டுபிடித்து, வரைந்து, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்துள்ளார், கோவையை சேர்ந்த, 5 வயது சிறுவன்.கோவை, சித்தாபுதுார் பகுதியை சேர்ந்த நவின் காகு - கரோலின் ரெபேக்கா தம்பதி மகன் ஜேசன் நெட்டானியல் காகு. ஐந்தே வயதான இச்சிறுவன், வீட்டில் இருந்தபடியே, ஒன்றாம் வகுப்பு படிக்கிறான்.

சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜேசன், கொடிகள், 'கார்ட்டூன்' கதாபாத்திரங்கள் என பல ஓவியங்கள் வரைந்துள்ளார். இதை கவனித்த பெற்றோர், குழந்தையின் திறமையை வளர்க்க பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு நாட்டு கொடிக்கும், ஒவ்வொரு கதையை கூறி, ஜேசனுக்கு பயிற்சி அளித்திருக்கின்றனர்.

அவற்றை தனது மூளையில் சேமித்து வைத்துள்ள ஜேசன், தொடர் பயிற்சியால், உலகிலுள்ள எந்த நாட்டின் கொடியை காட்டினாலும், பெயரை சரியாக கூறும் திறமை கொண்டிருக்கிறார். கொடியை பார்த்து பெயரைச் சொல்வது மட்டுமின்றி, ஒரு நாட்டின் பெயரைச் சொன்னால், அதன் கொடியையும் அழகாக வரைந்து வண்ணங்கள் தீட்டி அசத்துகிறார்.

சிறிய வயதில், 195 நாடுகளின் கொடிகள், 30 போக்குவரத்து குறியீடுகள், 15 வடிவங்கள், காய்கறி, பழங்கள், விலங்குகள், பறவைகள், எதிர் சொற்கள், தமிழ் உயிர் எழுத்துக்கள், மாதங்கள், வாரங்கள் போன்றவற்றை கூறி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்துள்ளார்.ஜேசனின் தந்தை நவின் கூறுகையில், ''சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் இருந்ததை கண்டறிந்தோம்.

தினமும் ஐந்து நாடுகளின் கொடிகளை வரைய கற்றுக்கொடுத்தோம். நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு நாட்டின் கொடியையும் கற்றுத்தர ஆரம்பித்தோம். ஒவ்வொரு மாதமும் குறைந்தது, 50 கொடிகள் வரைய கற்றுக்கொண்டு, மனதில் வைத்துக் கொண்டான். சில மாதங்களிலேயே அனைத்து நாடுகளின் கொடிகளும் அவனுக்கு 'அத்துபடி'யானது. 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில்' பதிவு செய்து, மகனின் வீடியோக்களை பதிவேற்றம் செய்தோம்; அதனை பரிசீலித்து, அங்கீகாரம் அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்கிற நோக்கில், பயிற்சி அளித்து வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X