பிரதமர் மோடி பிறந்தநாள் பா.ஜ., சார்பில் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி பிறந்தநாள் பா.ஜ., சார்பில் கொண்டாட்டம்

Added : செப் 19, 2021 | கருத்துகள் (1)
Share
கடலுார் : பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்டம் சார்பில், பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் விழா, மாவட்ட தலைவர் கோவிலானுார் மணிகண்டன் தலைமையில் கொண்டாடப்பட்டது.கடலுார் நகரில் நடந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் வெங்கடேசன், குமார், தாமோதரன், ஓ.பி.சி. அணி தலைவர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். கடலுார் சிப்காட்டில் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர்
 பிரதமர் மோடி பிறந்தநாள் பா.ஜ., சார்பில் கொண்டாட்டம்

கடலுார் : பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்டம் சார்பில், பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் விழா, மாவட்ட தலைவர் கோவிலானுார் மணிகண்டன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

கடலுார் நகரில் நடந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் வெங்கடேசன், குமார், தாமோதரன், ஓ.பி.சி. அணி தலைவர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். கடலுார் சிப்காட்டில் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் முன்னிலையில் கொடியேற்றினர். ஒன்றிய தலைவர் ரமேஷ் பங்கேற்றார். பச்சையாங்குப்பத்தில் ஊரக வளர்ச்சிப் பிரிவு தலைவர் செல்வகுமார் முன்னிலையில் அருள், ஜோதி, சிவா உட்பட பலர் பங்கேற்றனர். குறிஞ்சிப்பாடியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கிருஷ்ணா, விஜயரங்கன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பண்ருட்டியில் நகரத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் ஜீவா, வினோத்குமார் ஆகியோரும், நாணமேட்டில் ஊடகப் பிரிவு தலைவர் ஜனனி ஸ்ரீதர் தலைமையில் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் பேனா வழங்கப்பட்டது. ஊடகப்பிரிவு ரகு, சரவணன் பங்கேற்றார்.பண்ருட்டி தெற்கு ஒன்றியத்தில், தலைவர் திருமலைவாசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவு ஒன்றியத் தலைவர் நாகராஜன் பங்கேற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X