பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் தேர்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ்

Added : செப் 19, 2021
Share
Advertisement
செஞ்சி : தலைவர் பதவியை ஏலம் விட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருந்த கிராம மக்களிடம் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் தேர்தல் புறக்கணிப்பு முடிவை வாபஸ் பெற்றனர்.செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்னங்குப்பம் ஊராட்சியில் 1,427 ஓட்டுகளும், துணை கிராமமான துத்திப்பட்டு கிராமத்தில் 3,800 ஓட்டுகளும் உள்ளன.கடந்த சில தேர்தல்களாக

செஞ்சி : தலைவர் பதவியை ஏலம் விட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருந்த கிராம மக்களிடம் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் தேர்தல் புறக்கணிப்பு முடிவை வாபஸ் பெற்றனர்.

செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்னங்குப்பம் ஊராட்சியில் 1,427 ஓட்டுகளும், துணை கிராமமான துத்திப்பட்டு கிராமத்தில் 3,800 ஓட்டுகளும் உள்ளன.கடந்த சில தேர்தல்களாக துத்திப்பட்டு கிராமத்தில் தலைவர் பதவியை ஏலம் விட்டு ஒரே நபரை நிறுத்தி அந்த கிராமத்தில் இருந்து தலைவராக வெற்றி பெற்று வருகின்றனர்.

இந்த முறையும் துத்திப்பட்டில் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு விட்டதாக புகார் எழுந்தது.இதனால், பொன்னங்குப்பம் கிராமத்தினர் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலை தாசில்தார் ராஜன், பி.டி.ஓ.,க்கள் கேசவலு, சுப்பிரமணியன் ஆகியோர் பொன்னங்குப்பத்தில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் உடன்பாடு ஏற்படாததால், கலெக்டர் மோகன் தலைமையில் நேற்று மதியம் சமாதான கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் பேசுகையில், 'தலைவர் பதவி ஏலம் நடந்தது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நடக்கும். பொன்னங்குப்பம் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை பி.டி.ஓ.,க்களைக் கொண்டு நேரடியாக செய்து தரப்படும்.இந்த பகுதியைச் சேர்ந்த மூன்று வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகளை நேரடியாக கவனித்து தீர்வு காணப்படும்.

அடுத்த தேர்தலுக்குள் பொன்னங்குப்பம் ஊராட்சியை தனியாக பிரித்து புதிதாக துத்திப்பட்டு ஊராட்சி உருவாக்கப்படும்' என்றார்.இதையடுத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு முடிவை கைவிடுவதாக தெரிவித்தனர்.மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, ஏ.டி.எஸ்.பி., தேவராஜ், தாசில்தார் ராஜன், டி.எஸ்.பி., இளங்கோவன், பி.டி.ஓ.,க்கள் கேசவலு, சுப்ரமணியன் மற்றும் பொன்னங்குப்பம் கிராம மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X