சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழை நீரில் கார் சிக்கி அரசு பெண் டாக்டர் பலி

Added : செப் 19, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை;ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரில், கார் சிக்கி அரசு மருத்துவமனை பெண் டாக்டர் உயிரிழந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், துடையூரில் ஆளில்லா ரயில்வே கேட்டை, பொதுமக்கள் கடந்து செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் சுரங்கப் பாதை வழியாக செல்ல முடியாத நிலை
மழை நீரில் கார் சிக்கி அரசு பெண் டாக்டர் பலி

புதுக்கோட்டை;ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரில், கார் சிக்கி அரசு மருத்துவமனை பெண் டாக்டர் உயிரிழந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், துடையூரில் ஆளில்லா ரயில்வே கேட்டை, பொதுமக்கள் கடந்து செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் சுரங்கப் பாதை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் சுரங்கப் பாதையில், 3 அடி உயரத்திற்கும் அதிகமான தண்ணீர் தேங்கியிருந்தது. துடையூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், 40; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சத்யா, 35; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாமியார் ஜெயம், 60 என்பவருடன் சத்யா காரில் துடையூருக்கு வந்தார்.நள்ளிரவு 11:00 மணியளவில் ரயில்வே சுரங்க பாதையை, கார் கடக்க முயன்ற போது, அங்கு தேங்கி இருந்த மழை நீரில் கார் மூழ்கியது. ஜெயம் கார் கதவை திறந்து வெளியேறி விட்டார். சத்யா சீட் பெல்ட் அணிந்து இருந்ததால், காரில் இருந்து, உடனடியாக வெளியே வர முடியவில்லை.இதை அறிந்த அந்த பகுதி மக்கள், கார் கதவை உடைத்து சத்யாவை மீட்டனர். இருவருரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் சத்யா இறந்தார். ஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார்.அப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், சுரங்கப் பாதைக்கு பதிலாக, மாற்றுப் பாதை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர். தொடர்ந்து ரயில்வே பாலத்தின் மேல் பகுதி வழி பொதுமக்கள் செல்ல திறந்து விடப்பட்டது. வெள்ளனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆர்.டி.ஓ., பேச்சுபெண் டாக்டர் பலியான சம்பவம் தொடர்பாக நேற்று இலுப்பூர் ஆர்.டி.ஓ., பால தண்டாயுதபாணி, துடையூர் மக்களுடன் பேச்சு நடத்தினார்.தொடர்ந்து, ரயில்வே சுரங்கப் பாதையை மூடி விட்டு, பொது மக்கள் ரயில்வே கிராசிங்கை கடந்து நடந்து செல்லும் வகையில், தற்காலிக பாதை ஏற்படுத்தினர். பின் ஆர்.டி.ஓ., காரை முற்றுகையிட்ட பொதுமக்கள், ரயில்வே கிராசிங்கில் வாகனங்கள் செல்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர்.ஆணையர் ஆய்வுதுடையூருக்கு வந்த மதுரை மண்டல ரயில்வே பயணியர் பாதுகாப்பு ஆணையர் அன்பரசு, பெண் டாக்டர் பலியான சுரங்க பாதை பாலத்தை பார்வையிட்டார். பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அன்பரசு கூறும்போது, ''ரயில்வே சுரங்கப் பாதை மற்றும் இங்கு நடந்த சம்பவம் பற்றி, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்படும். பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்'' என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X