லாட்டரி சீ்ட்டு விற்ற இருவர் கைது

Added : செப் 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பிள்ளைத்தோட்டம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம் திருவள்ளுவர் சாலையில் உள்ள டீ கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, அந்த டீ கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். டீ

புதுச்சேரி : பிள்ளைத்தோட்டம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம் திருவள்ளுவர் சாலையில் உள்ள டீ கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, அந்த டீ கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். டீ கடை கல்லா பெட்டியில், அரசால் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் இருந்தன.கடை உரிமையாளரான பிள்ளைத்தோட்டம், பள்ளத் தெருவைச் சேர்ந்த தாமோதரன், 52; என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த டோனி என்பவருடன் சேர்ந்து, மொபைல்போன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து, ரூ. 760 பணம் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X