சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொதுத் துறை தகவல்கள் ; மர்ம நபர்கள் மிரட்டல்

Added : செப் 19, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் பொதுத்துறை கணினிகளில் புகுந்து, ரகசிய தகவல்களை திருடியதுடன், 1,950 அமெரிக்க டாலர் கேட்டு, மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த தகவல், அதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக பொதுத் துறையின் ஒரு பிரிவில் இருந்த, 12 கணினிகளில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்களை, மர்ம நபர்கள், 'ஹேக்' செய்துள்ளனர். பொதுத் துறையில் தான், வி.ஐ.பி.,க்கள் வருகை,

சென்னை:தமிழக அரசின் பொதுத்துறை கணினிகளில் புகுந்து, ரகசிய தகவல்களை திருடியதுடன், 1,950 அமெரிக்க டாலர் கேட்டு, மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த தகவல், அதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக பொதுத் துறையின் ஒரு பிரிவில் இருந்த, 12 கணினிகளில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்களை, மர்ம நபர்கள், 'ஹேக்' செய்துள்ளனர். பொதுத் துறையில் தான், வி.ஐ.பி.,க்கள் வருகை, அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த விபரங்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி தொடர்பான விபரங்கள் கையாளப்படுகின்றன.மர்ம நபர்கள் அந்த ரகசிய தகவல்களை திருடியதுடன், அவற்றை மீண்டும் வழங்க, 1,950 அமெரிக்க டாலர், அதாவது, ௧.௪௨ லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X