ஆற்றில் சிக்கியவர் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் சிக்கியவர் மீட்பு

Added : செப் 19, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால், மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.அம்பராம்பாளையத்தில் ஆற்றின் நடுவே உள்ள பாறை மீது நின்ற ஒருவர் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அவ்வழியாக சென்ற மக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் வீரர்கள் வந்தனர். கயிற்றை
 ஆற்றில் சிக்கியவர் மீட்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால், மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.அம்பராம்பாளையத்தில் ஆற்றின் நடுவே உள்ள பாறை மீது நின்ற ஒருவர் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அவ்வழியாக சென்ற மக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் வீரர்கள் வந்தனர். கயிற்றை கட்டி வீரர்கள் ஆற்றில் இறங்கி, அந்த நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின், அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X