பொது செய்தி

இந்தியா

முதலியார்பேட்டை தொகுதியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

Added : செப் 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாள் விழா, முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பிரதமர் பிறந்த நாள், மக்கள் சேவை தினமாக அனுசரிக்கப்பட்டது. அதை யொட்டி, தொகுதி முழுவதும் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.புவன்கரே வீதி சக்திவேல் பரமானந்த சுவாமி கோவிலில் நடந்த தடுப்பூசி முகாமை அசோக்பாபு

புதுச்சேரி : பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாள் விழா, முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பிரதமர் பிறந்த நாள், மக்கள் சேவை தினமாக அனுசரிக்கப்பட்டது. அதை யொட்டி, தொகுதி முழுவதும் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.புவன்கரே வீதி சக்திவேல் பரமானந்த சுவாமி கோவிலில் நடந்த தடுப்பூசி முகாமை அசோக்பாபு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.தொகுதியில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு பதிவு முகாமையும் அசோக்பாபு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

பிரதான் மந்திரி சுரக் ஷா, பீமா யோஜனா திட்டத்தில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பா.ஜ., மாவட்ட செயலாளர் ரத்தினவேலு, நகர மாவட்ட துணை தலைவர் விஜயரங்கம், முதலியார்பேட்டை தொகுதி தலைவர் இன்பசேகரன், குமார், முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ், கார்த்தியேன், கமலக்கண்ணன், சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X