பொது செய்தி

இந்தியா

தாசில்தார், துணை தாசில்தார்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரம்

Added : செப் 19, 2021
Share
Advertisement
அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல்புதுச்சேரி : தாசில்தார், துணை தாசில்தார்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.புதுச்சேரி கவர்னர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கவர்னர் தமிழிசை பல முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதில், இந்திய மருத்துவ முறை ஹோமியோபதி

அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரி : தாசில்தார், துணை தாசில்தார்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.புதுச்சேரி கவர்னர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கவர்னர் தமிழிசை பல முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதில், இந்திய மருத்துவ முறை ஹோமியோபதி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு, சுகாதாரத் துறையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு (அலோபதி) இணையாக தொகுப்பூதிய விகிதத்தை மாதம் ஒன்றுக்கு ரூ. 40,000ல் இருந்து ரூ 50,000 ஆக உயர்த்தும் திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.புதுச்சேரி, காரைக்காலில் தாசில்தார் அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார், செயற்துறை நடுவர்களுக்கு, வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதேபோல, மாகி, ஏனாம் பிராந்திய துணை தாசில்தார் அலுவலகங்களில் பணியாற்றும் துணை தாசில்தார் மற்றும் செயற்துறை நடுவர்களுக்கு, வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இது, வாரிசு சான்றிதழ் பெற நீதிமன்றங்களை அணுகும் மக்களின் சிரமங்களையும், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதையும் குறைக்கும்.மாநிலத்தில் உள்ள 2216 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ. 5,500 வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரண உதவி யாக ரூ.1.21 கோடி வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X