பொது செய்தி

இந்தியா

ராணுவத்தில் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சிகளுக்கு இந்தி பாடல்கள்

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி-நம் ராணுவத்தில் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் இசைப்பதற்காக, உள்நாட்டிலேயே இசை கோர்க்கப்பட்ட ஹிந்தியில் எழுதப்பட்ட பாடல்கள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது.தற்போது ராணுவத்தால் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இசைக்கப்படும் பாடல்கள் ஆங்கிலேயர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்டவை.குறிப்பாக

புதுடில்லி-நம் ராணுவத்தில் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் இசைப்பதற்காக, உள்நாட்டிலேயே இசை கோர்க்கப்பட்ட ஹிந்தியில் எழுதப்பட்ட பாடல்கள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது.



latest tamil news


தற்போது ராணுவத்தால் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இசைக்கப்படும் பாடல்கள் ஆங்கிலேயர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்டவை.குறிப்பாக 'ஆல்ட் லாங் சைனே' போன்ற பாடல்கள் ராணுவ அகாடமிகளில் நடத்தப்படும் அணிவகுப்பு உள்ளிட்டவற்றில் இசைக்கப்படுகின்றன. அதேபோல் 'அபைட் வித் மீ' எனப்படும் கிறிஸ்துவ பாடலும் பயன்படுத்தப்படுகிறது.குடியரசு தின விழாவின் கடைசி நிகழ்ச்சியான படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில், இதுபோன்ற பாடல்கள் இசைக்கப்படுகின்றன.இவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை.


latest tamil news


இதற்கு பதிலாக நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், ராணுவத்தின் வீர தீரம், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் பாடல்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு மூன்று நிறுவனங்கள் புதிய பாடல்களை உருவாக்க முன்வந்துள்ளன. இது தொடர்பாக பேச்சு நடக்கிறது. அதனால் விரைவில் ராணுவத்தில் புதிய பாடல்களை இசைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-செப்-202122:33:23 IST Report Abuse
sankaseshan கிருஸ்துவ கீதங்கள் இசைக்க படுகின்றன இந்த விஷயம் இப்பதான் வெளிச்சத்துக்கு வருகிறது வெள்ளைக்காரன் சப்தம் இல்லாமல் மத மாற்றத்துக்கு விதை விதைத்து இருக்கான்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
19-செப்-202120:22:56 IST Report Abuse
தமிழ்வேள் காங்கிரஸ் கட்சி இந்துக்களை உள்ளடக்கியது அல்ல ..மதிப்பதும் இல்லை ..எனவே அல்லேலூயா கீதங்கள் ...கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் , ஜிஹாத் ஜிஹாத் ஐ கூட வைத்திருப்பார்கள் ....
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
19-செப்-202114:40:52 IST Report Abuse
கௌடில்யன் தமன்னா பாட்டியா இந்த மாதிரி தான் மொழி புரியாம பேசுவாங்க ...அமெரிக்காவிலேயே காமினி என்ற பெயரில் பெண் ஊழியர் இருந்தால் கமினி என்று கூப்பிடுவாங்க ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X