பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மெகா முகாம்: இரவு 9:20 மணி வரை 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய, 20 ஆயிரம் மையங்களில் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இரவு 9:20 மணி வரை 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் இதுவரை 54 சதவீதம் பேருக்கு, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்றாம் அலை பரவலை தடுக்கும்

சென்னை: தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய, 20 ஆயிரம் மையங்களில் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இரவு 9:20 மணி வரை 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.



latest tamil news



தமிழகத்தில் இதுவரை 54 சதவீதம் பேருக்கு, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில், ஓரிரு மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி இம்மாதம் 12ம் தேதி, 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு, 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்று பல்வேறு மையங்களில், பிற்பகலுக்குள் தடுப்பூசி காலியாகி விட்டது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிகம் முன்வருவதால், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என, 20 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


4 கோடியை தாண்டியது



இந்நிலையில் நேற்று வரை 3.96 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று காலை 11:30 மணியளவில் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.


முதல்வர் ஆய்வு



சென்னையில், சைதாப்பேட்டை அருகே தடாக நகரில் சமுதாய கூடத்தில் நடக்கும் தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்த குறிப்புகளை ஆய்வு செய்ததுடன், தடுப்பூசி போட்டவர்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.


latest tamil news



பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:தமிழகத்தில் 17 லட்சம் தடுப்பூசிகள் தான் கையிருப்பில் உள்ளன. அதனால், தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.மேலும், 15 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி வழங்கும்பட்சத்தில், மூன்று மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த முடியும். பொது மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
19-செப்-202120:46:53 IST Report Abuse
தமிழ்வேள் ஊரக பகுதிகளில் நிறைய இடங்களில் சரியான இடத்தேர்வு இல்லை ...சாலை ஓரங்களில் ஷாமியானா கட்டி உள்ளே அமர்ந்து தடுப்பூசி போடும் பணிநடந்தது ....இன்று பள்ளிகள் விடுமுறை என்பதால் ஊராட்ச்சிகளில் உள்ள பள்ளிகளில் ஏதேனும் ஒன்றிரண்டை ஒதுக்கி கொடுத்திருக்கலாம் ..ஆனால் செய்யவில்லை ...நிர்ணயிக்க பட்ட இடங்கள் கூட கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு இடம் தேடி அலைவோரை பார்க்க நேர்ந்தது ...ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் பேனர் போஸ்டர் எதுவும் இல்லை ...வாட்ஸ் ஆப் குழுக்கள் , பொது சேவை அமைப்புகள் , ஏன் சாதி சங்கங்கள் கூட தடுப்பூசி போடும் இடங்களை தங்கள் குழுக்களில் பகிர்ந்தநர் ..ஆனால் ஊராட்சி அமைப்புகளால் இயலவில்லை ..அது எனோ தெரியவில்லை /
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
19-செப்-202118:29:35 IST Report Abuse
PRAKASH.P No stock covisheild
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
19-செப்-202110:32:52 IST Report Abuse
R. Vidya Sagar நல்ல விஷயம். ஆனால் இந்த ஊசி போடும் இடங்கள் பற்றி கோவின் இணையதளத்தில் எந்த விபரமும் போடுவதில்லை. கோவினில் தமிழ் இல்லை என்று கூப்பாடு மட்டும்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X