நிறைய தெலுங்கு சினிமா பார்ப்பீர்கள் போலிருக்கிறதே...

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
அ.தி.மு.க.,வில் ஒரு லட்சம் தொண்டர்கள் என் வழியில் பயணிக்கின்றனர். 2024 லோக்சபா தேர்தலுக்குள், தொகுதிக்கு தலா ஆயிரம் அ.தி.மு.க., விசுவாசிகளைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் ஈடுபட வைத்து, அ.தி.மு.க., தலைமை பொறுப்பை கைப்பற்றுவேன்.- அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி'நிறைய தெலுங்கு சினிமா பார்ப்பீர்கள் போலிருக்கிறதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க.,
நிறைய தெலுங்கு சினிமா பார்ப்பீர்கள் போலிருக்கிறதே...

அ.தி.மு.க.,வில் ஒரு லட்சம் தொண்டர்கள் என் வழியில் பயணிக்கின்றனர். 2024 லோக்சபா தேர்தலுக்குள், தொகுதிக்கு தலா ஆயிரம் அ.தி.மு.க., விசுவாசிகளைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் ஈடுபட வைத்து, அ.தி.மு.க., தலைமை பொறுப்பை கைப்பற்றுவேன்.
- அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி


'நிறைய தெலுங்கு சினிமா பார்ப்பீர்கள் போலிருக்கிறதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி பேட்டி.இலங்கையில் தமிழ் எழுத்துகளை அழித்து சீன மொழியில் பெயர் பலகைகளை எழுதுகின்றனர்; இலங்கையை சீனாவிற்கு விற்றாகி விட்டது. பால் மாவு 1 கிலோ 1,000 ரூபாய். அத்தியாவசிய பொருட்கள் யானை விலை; குதிரை விலைக்கு விற்கப்படுகின்றன.
- தி.மு.க., செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்


'அண்டை நாடான இலங்கையின் நிலை கவலையை ஏற்படுத்துகிறது. எனினும், அது அவர்கள் நாட்டு பிரச்னை. நமக்கு என்ன...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை.வெளிநாட்டைச் சேர்ந்த மூத்த தமிழறிஞர், 'கால்டுவெல் காலத்திற்கு பின் வந்த இலக்கியங்களைத் தான் திராவிட இலக்கியங்கள் என சொல்கிறோம்' என்கிறார் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு. அந்த இலக்கியங்கள் தமிழ் மொழியில் தானே எழுதப்பட்டுள்ளன. பின்பு, அவற்றை தமிழ் இலக்கியம் என்று தானே சொல்ல வேண்டும்; ஏன் திராவிட களஞ்சியம் என்கிறீர்கள்?
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'சரியான கேள்வி தான். இதுபோன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இருக்காதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரவி, ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருக்கும் போதே, வட கிழக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்தியவர். நாகாலாந்து கவர்னராக ஆன பின், அங்கு பயங்கரவாதம் குறைந்து அமைதியாக மாறியது.
- தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை


'அதனால் தான் இங்குள்ள பிரிவினைவாதிகள் கவலைப்படுகின்றனரோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி.தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் பா.ஜ., வாங்கு வங்கி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அப்படி இல்லாததற்கு காரணம் திராவிட அரசியலின் வலிமையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் செயல்முறையும் தான்.
- காங்கிரசை சேர்ந்த, தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்


'நீங்கள் பேசாமல் காங்கிரசுக்கு 'டாட்டா' காண்பித்து, தி.மு.க.,வில் சேர்ந்து விடலாம். தி.மு.க.,வில் கூட அவரை யாரும் இந்த அளவுக்கு போற்றுவதில்லை...' என, கூறத் துாண்டும் வகையில், காங்கிரசை சேர்ந்த, தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், அந்தந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மேலிடப் பொறுப்பாளர்களிடம் விருப்ப மனுவை அளிக்க வேண்டும். விருப்ப மனுவுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'கட்சி கஜானா நிரம்பி விட்டதா அல்லது போட்டியிட ஆள் கிடைக்கவில்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.ஹிட்லர், முசோலினி கூட ஒரு காலத்தில் அசைக்க முடியாமல் அசுர பலத்துடன் இருந்தவர்கள் தான். இப்போது அவர்கள் புதைக்கப்பட்ட இடம் கூட தெரியவில்லை. அதுபோல, மத்தியில் பா.ஜ., அரசு தோற்கடிக்கப்பட்டு, ராகுல் தலைமையில் காங்., அரசு மலரும்.
- கரூர் தொகுதி காங்., - எம்.பி., ஜோதிமணி


latest tamil news
'அதற்கான அறிகுறிகள் தென்படவில்லையே. திரிணமுல், தி.மு.க., போன்ற மாநில கட்சிகள் தானே விஸ்வரூபமாக வளர்ந்து வருகின்றன... உங்கள் ஆசை நிராசை தானோ...' என, கூறத் தோன்றும் வகையில், கரூர் தொகுதி காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி.இத்தனை ஆண்டுகளாக ஒரு கழிப்பறை கூட புதிதாக கட்டாதவர்கள் தான், டில்லியில் பல ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்படும் புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
- தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி


'எதிர்ப்பு தெரிவிப்போர், எம்.பி.,க்களாக தேர்வானாலும் அந்த கட்டடத்தின் உள்ளே செல்ல மாட்டார்கள் போலிருக்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை.'வெள்ளையன் வெளியேறி விட்டால் நம்மால் குண்டூசி கூட தயாரிக்க முடியாது; சென்னை ராஜதானியை லண்டனில் இருந்தவாறு ஆட்சி புரிய வேண்டும்' என்று சொன்னவருக்கு தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்படுவது கொடுமை!
- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி தானே இருக்கிறது. இப்போது யோசித்து என்ன பயன்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.எம்.ஜி.ஆர்., பெரியவர். அவரை கூட சட்டசபையில் பெரிதாக யாரும் புகழவில்லை. அந்தம்மா ஜெயலலிதா வந்த பிறகு, அவரை 'காளியாத்தா... மாரியாத்தா...' என புகழ்ந்தனர். அது பிடிக்காததால் தான் எங்கள் தலைவர் ஸ்டாலின், என்னை சபையில் யாரும் புகழக் கூடாது என உத்தரவு போட்டுள்ளார்.
- தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்


'ஆனாலும், எல்லாரும் மூச்சுக்கு முன்னுாறு தரம் முதல்வர் புகழை பாடத் தானே செய்கிறீர்கள்...' என கூறத் துாண்டும் வகையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உடல் நிலை சரியில்லை. எனவே, அவரின் சுமையை பகிர்ந்து கொள்ள, அவர் மகன் துரை வைகோ இருப்பார் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.
- தி.மு.க.,வில் இணைந்துள்ள நாஞ்சில் சம்பத்


'இது தான் வாரிசு அரசியல் எனப்படுகிறது. கட்சியில் தனக்கு பின் இன்னொரு தலைவரை உருவாக்காமல் விட்டது வைகோவின் தவறே...' என, கூறத் தோன்றும் வகையில், பல கட்சிகளில் இருந்து தி.மு.க.,வில் இணைந்துள்ள நாஞ்சில் சம்பத் பேட்டி.இந்தியாவின் எதிர்காலத்தையே பிரதமர் மோடி அழித்து விட்டார். 2016 - 17ல் 15.66 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம் கடந்த ஆகஸ்டில், 32.03 சதவீதமாக உயர்ந்து விட்டது.
- மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி


'காரணம் கொரோனாவாகத் தான் இருக்குமே தவிர, பிரதமர் மோடியாக இருக்க மாட்டார்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
19-செப்-202121:53:31 IST Report Abuse
BASKAR TETCHANA என் உங்கள் கட்சியில் இந்திரா அம்மையார் கூட அசைக்க முடியாமல் தான் இருந்தார். தற்போது அவரது படமும் எங்குள்ளது என்றே தெரியவில்லை.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
19-செப்-202117:52:13 IST Report Abuse
Soumya கே சி விடியலின் கேடுகெட்ட கைக்கூலி அவனது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
19-செப்-202117:25:54 IST Report Abuse
ganesha பிரமாதமான கமெண்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X