பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் இதுவரை 80 கோடி பேருக்கு தடுப்பூசி

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 80 கோடியை தாண்டியது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 30,773 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,34,48,163 ஆனது.மேலும் 38,945 பேர் கோவிட்டில் இருந்து மீண்டதை தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 80 கோடியை தாண்டியது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 30,773 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,34,48,163 ஆனது.


latest tamil news


மேலும் 38,945 பேர் கோவிட்டில் இருந்து மீண்டதை தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,26,71,167 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 3,32,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும் 309 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், பலியானவர்களின் எண்ணிக்கை 4,44,838 ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 85,42,732 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,43,72,331 ஆனது.


latest tamil news




நேற்று 15,59,895 மாதிரிகள் கோவிட் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் இதுவரை கோவிட் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 55,23,40,168 ஆனது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-202117:23:32 IST Report Abuse
அப்புசாமி சும்மாவா... அங்கே பைடன், ஜிங் ஜிங், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் போன்றவர்களுக்கும் காய்ச்சல் வந்திருச்சாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X