பொது செய்தி

தமிழ்நாடு

"தடுப்பூசி செலுத்துவதில் கோவை மாவட்டம் முதலிடம்'

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பொள்ளாச்சி: ''கோவை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளது" என அமைச்சர் தெரிவித்தார்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பிராணவாயு உற்பத்தி அலகு துவக்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா
தடுப்பூசி, கோவை, மாவட்டம், முதலிடம், அமைச்சர், சுப்ரமணியன், சுப்பிரமணியன், மா.சுப்ரமணியன்

பொள்ளாச்சி: ''கோவை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளது" என அமைச்சர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பிராணவாயு உற்பத்தி அலகு துவக்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.


latest tamil news



பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 56 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 29,27,149 பேர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர். அதில், 22,04,631 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில், இரண்டாவது தவணை தடுப்பூசி, 7,18,335 பேருக்கு செலுத்தப்பட்டது. கோவையில், 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கோவை மாவட்டம் தடுப்பூசி செலுத்தியதில் முதலிடம் வகிக்கிறது." இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-202123:12:05 IST Report Abuse
Ram Pollachi புதிய கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவே இல்லை அதற்கு உள்ளாக தனியார் அவசர ஊர்திகள் ரோட்டில் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். சில இடங்களில் கட்சிக்காரர்கள் டோக்கனை வைத்து விளையாடுவது இன்றும் நடந்து கொண்டு இருப்பது வேதனை. இன்று நேரு ஸ்டேடியத்தில் நடந்த தடுப்பூசி முகாமில் பயனாளிகளை கவனித்த விதம் பாராட்டத்தக்கது.... நன்றி
Rate this:
Cancel
Radhakrishnan - Marthandam, Nagercoil,இந்தியா
19-செப்-202120:47:31 IST Report Abuse
Radhakrishnan கேரளா வை குறை சொல்ல வேண்டாம். அங்கு சின்ன காய்ச்சல் வந்தாலே பரிசோதனை செய்கிறார்கள். என்னோட மாவட்டத்தில் அல்மோஸ்ட் எல்லா வீட்டிலும் காச்சல் அல்லது ஜலதோஷம் இருக்கு, ஆனா யாரும் பரிசோதனை பண்றது இல்ல . வீட்டிலேயே அவங்களுக்கு தெரிந்த இயற்க்கை மருந்து எடுக்குரங்கா. தமிழ்நாட்டுல எல்லாருக்கும் டெஸ்ட் பண்ண தெரியும் உண்மை நிலைமை.
Rate this:
Cancel
19-செப்-202119:12:42 IST Report Abuse
Saikumar C Krishna COWIN இணைய தளத்தில் சென்னை பெருநகர் இதுவரை தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களிலேயே அதிகபடியான தடுப்பூசி போட்டுள்ளது. இதுவரை 58 லட்சம் பேருக்கு மொத்த ஊசி போடப்பட்ட நிலையில், ஒரு முறை தடுப்பூசி 39.6 லட்சம் பேரும், இரண்டு முறை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 18.88 லட்சம் பேரும் ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X