ஒரே ஒரு இடுப்பழகு போட்டோவால் பிரபலமாகி, ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து, தமிழ் திரையில் அழகு தேவதையாக, இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ரம்யா பாண்டியன் மனம் திறக்கிறார்...
இடைவெளிக்கு பின் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'
இந்த படத்தில் 'வீராயி' கேரக்டரில் நடிக்கிறேன். சிறு இடைவெளிக்கு பின் தரமான படத்தின் மூலம் மக்களை சந்திப்பதில் சந்தோஷம். புதுமுகம் அரிசில் மூர்த்தி இயக்கியிருக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் 'இடும்பன்காரி' திரில்லர் படத்தில் நானும் ஷிவதாவும் நடிச்சிருக்கோம்.
திருநெல்வேலி டூ கோடம்பாக்கம் உங்களுடைய திரைப்பயணம்
நம் வாழ்க்கையில் ஒரு விஷயம் நடக்கனும்னா மெனக்கடனும். பொறுமையும், உழைப்பும் அவசியம் என நான் உணர்ந்து கொண்டேன். இப்ப நான் ரொம்ப ஹேப்பி
தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்திற்கு பின் நிறைய படங்கள்..
'ஜோக்கர்'ல் என் நடிப்பை நிறைய பேர் பாராட்டினாங்க. அதற்கு பின் நிறைய வாய்ப்பு வரும், தேசிய விருது வாங்கியதும் மக்களிடம் ரீச் ஆகிட்டோம்னு நினைத்தேன். இப்போது எனக்கான நேரம் வந்திருக்கு...
ரம்யாவின் இடுப்பழகு போட்டோ, 'குக் வித் கோமாளி டிவி ஷோ'...
நான் நடித்த படம் தேசிய விருது வாங்கிய போது கூட யாரும் திரும்பிப் பார்க்கலை. ஆனால், அந்த ஒரு போட்டோவால் பிரபலமானேன். 'குக் வித் கோமாளி' மக்கள் குடும்பங்களில் என்னை ஒரு உறுப்பினராக்கியது. என்னை எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பித்தது அந்த ஷோவில் தான்.
காமெடி கிங் புகழுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள கெமிஸ்ட்ரி
எங்கே, எப்படி, எந்த ஷோவில் எப்படி ரியாக்ட் பண்ணனும் எல்லாமே அவருக்கு தெரியும். காமெடியன் அப்படிங்கறது தாண்டி நிறைய திறமைகள் இருக்கு. அதிகமா நடிப்பது, பேசுவதை விட ரியாக்சன்ல சிரிக்க வைப்பவர்.
நிறைய யோகா போஸ் போட்டோஸ் பார்க்க முடியுதே என்ன விஷயம்
இரண்டு ஆண்டுகளாக யோகா பயிற்சி பண்றேன். நடிப்பு ஓகே., ஆனால் பார்க்க கொஞ்சம் அழகா இருக்க தான் கடும் யோகா முயற்சிகள்... அதுக்கு எனக்கு யோகா ரொம்ப உதவியா உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE