வேலையில்லாதவர்களுக்கு ரூ.5,000: உத்தரகண்டில் கெஜ்ரிவால் வாக்குறுதி

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
டேராடூன்: உத்தரகண்டில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (செப்., 19) அறிவித்தார்.உத்தரகண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. எதிர்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம்
Arvind Kejriwal,Aam Aadmi Party, AAP, Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

டேராடூன்: உத்தரகண்டில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (செப்., 19) அறிவித்தார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. எதிர்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஆசைப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 3 முறை உத்தரகண்ட் மாநிலத்திற்கு வந்து பொதுக் கூட்டங்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்புகளை நடத்தியுள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஜூலை மாதம் வருகையின் போது 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி தந்தார். அதற்குள்ளாகவே டி.டி.வி.தினகரன் பாணியில் அதற்கு டோக்கன் வழங்க ஆரம்பித்துவிட்டார்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.

இந்நிலையில் இன்று நைனிடாலில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில வேலைவாய்ப்பில் 80 சதவீதம் உத்தரகண்ட்டில் வசிப்பவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். வேலைவாய்ப்புகளை தேட இணையதளம் தொடங்கப்படும். டில்லியில் இதுப்போன்ற இணைய போர்ட்டல் மூலம் 10 லட்சம் பேர் வேலைப் பெற்றார்கள். மேலும் வேலைவாய்ப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்கள் துறை அமைச்சகம் உருவாக்கப்படும்.


latest tamil news


பா.ஜ.,வுக்கு வாக்களித்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய முதல்வரைத் தான் பெற முடியும். டில்லியில் இலவச மின்சாரம் வழங்கி சாதித்து காட்டினோம். அரசுக்கு ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உறுதியிருந்தால் செய்ய முடியும். பா.ஜ., காங்கிரஸிலும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். அத்தகைய நல்ல மனிதர்கள் ஆம் ஆத்மிக்கு வரவேற்கப்படுகின்றனர். அனைத்து குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் 1 லட்சம் அரசு வேலைகளை ஆம் ஆத்மி வழங்கும். வேலையில்லாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
20-செப்-202112:19:06 IST Report Abuse
Soumya இங்கேயும் ஒருத்தன் இப்புடி தாய்யா பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தான் இப்போது வாயை திறக்கமாட்டுறான் கேட்டால் கடன் சுமைன்னு உதார்விடுறான்
Rate this:
Cancel
20-செப்-202110:34:55 IST Report Abuse
அப்புசாமி ஒரே நேஷன்... ஓசி நேஷன். பெரீவர் விவசாயிகளுக்கு ஓசின்னு ஆரம்பிச்சாரு. இதையே அடுத்த லெவலுக்கு கொண்டு போறாரு கேசரிவால். பிச்சை போடுவதில் எல்லோரும் தாராள பிரபுக்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-செப்-202108:34:13 IST Report Abuse
duruvasar இவருக்கு இந்தமாதிரியான வியூங்களை வகுத்து கொடுத்துவிட்டுத்தான் இங்கே ஸ்டாலினிடம் வந்தார் பிராசாந் கிஷோர். எனவே இந்த பெருந்தொற்று இப்போதிற்க்கு நம்மை விட்டு போகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X