பஞ்சாப் முதல்வராகிறார் சரண்ஜித்சிங் சன்னி

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக, சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். விரைவில் அவர் பதவி ஏற்க உள்ளார்.காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வந்தது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவருமான சித்துவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், சில எம்.எல்.ஏ.,க்கள் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என
Punjab,பஞ்சாப், சரண்ஜித் சிங் சன்னி

சண்டிகர்: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக, சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். விரைவில் அவர் பதவி ஏற்க உள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வந்தது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவருமான சித்துவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், சில எம்.எல்.ஏ.,க்கள் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இதனால், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டம் துவங்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


latest tamil news



இதனிடையே, இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ஹாரீஸ் ராவத் தெரிவித்தார். அமரீந்தர் சிங் அரசில் சரண்ஜித் சிங் சன்னி, தொழில்நுட்பக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
20-செப்-202111:36:45 IST Report Abuse
Dhurvesh மோடி என்னடாவென்றால் jain இனத்தை சேர்ந்தவரை இறக்கிவிட்டு படேல் இனத்தவரை சேர்கிறார் வோட்டுக்கு , UP உயர்ஜாதி வோட்டுக்கு ஜிதேந்திர வை சேர்கிறார் , இங்கே இவர் இந்த டர்பன் தலித் என்பதால் முதல்வர், எல்லாமே திருட்டு கூட்டம் இதில் DMK வை குறை சொல்லி கோமாளி கோவிந்தங்கள்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
20-செப்-202110:36:33 IST Report Abuse
 N.Purushothaman இப்போ இவரு மேல மீ டூ புகார் இருப்பதால அது தான் இப்போ புயலை கிளப்பி இருக்காம் ...
Rate this:
Cancel
20-செப்-202108:19:15 IST Report Abuse
பேசும் தமிழன் சீக்கியர்களை ஒரே இனமாக இதுவரை நினைத்து கொண்டு இருந்தேன்... நம் தமிழ்நாட்டில் தான்.... ஜாதி ஜாதி என்று கும்மி அடிக்கிறார்கள் என்று பார்த்தால்... பஞ்சாப்பில் கூட தலித் சீக்கியர் என்று பிரித்து விட்டான் பார்... கான் கிராஸ் காரன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X