பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,697 ஆக சற்று அதிகரித்துள்ளது: 1,594பேர் நலம்

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,653 -ல் இருந்து 1,697 ஆக சற்று அதிகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,594 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,56,850 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 1,696 பேருக்கும்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,653 -ல் இருந்து 1,697 ஆக சற்று அதிகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,594 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,56,850 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 1,696 பேருக்கும் கேரளாவிலிருந்து வந்த ஒருவரையும் சேர்த்து 1,697 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,53,01,370 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,004 பேர் ஆண்கள், 693 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,44,312 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,01,030 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,594 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,93,074 ஆக உயர்ந்துள்ளது.

27 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 24 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,337 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை



சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக இருந்த நிலையில் இன்று (19ம் தேதி) 232 ஆக அதிகரித்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
20-செப்-202108:29:24 IST Report Abuse
duruvasar ஆட்சிக்கு வந்து 60 நாளில் 5000 க்கும் கீழ் பாதிப்பை கொண்டுவந்த ஊடகங்களின் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. ஊடக முன்களஸ்களுக்கு முன்பைவிட சிறப்பாக பணிபுரிய ஊக்ககத்தொகை அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிடவேண்டடும்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
20-செப்-202100:11:59 IST Report Abuse
Aarkay நலம் பெற்று வீடு திரும்பியோரைவிட, தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம். மக்களே, உஷார் கழுத்துக்கு மாஸ்க் போடுவது, மூக்குக்கு கீழே போடுவது என்றெல்லாம் இல்லாமல், மாஸ்க் சரியாய் அணிந்தும், கைசுத்தம் பேணியும் தற்காத்துக்கொள்வோம். social distancing மட்டும் இந்தியாவில் நடைமுறை சாத்தியமில்லை. அரசுகளை குறைகூறி பிரயோஜனமில்லை.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
19-செப்-202119:14:09 IST Report Abuse
Raj விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் சிறப்பு பஸ், மக்கள் கூட்டம் தான் மீண்டும் உயர்வுக்கு காரணம். இந்த லட்சசனத்தில் இவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தணுமாம்.
Rate this:
20-செப்-202108:20:11 IST Report Abuse
RanjithHa ha ha in that case it should be zero before Ganesha festival, why not reduced when in Delhi, UP etc... is below 50....
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
20-செப்-202123:31:31 IST Report Abuse
Aarkayகண்டுபிடித்தான் பார் காரணம். பார்க்கத்தானே போறோம் கிறுஸ்துமஸுக்கு என்ன செய்யப்போறாங்கன்னு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X