அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்ட கூடிய தேர்வாக உள்ளது:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்ட கூடிய தேர்வாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவையில் இன்று பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக வின் மாநிலத்து தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கோவையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மக்கள் சேவைகள் நடைபெறுவதாகவும், கோவை மாநகர

நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்ட கூடிய தேர்வாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



latest tamil news




கோவையில் இன்று பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக வின் மாநிலத்து தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கோவையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மக்கள் சேவைகள் நடைபெறுவதாகவும், கோவை மாநகர காவல்துறை திமுக வின் கூலிப்படையாக இருந்து மோடியின் பிறந்தநாள் போஸ்டரை கிழித்ததற்கு பாஜக வின் கண்டனத்தை பதிவு செய்கிறோம் எனவும் கூறினார். நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் இறக்கும் நிலையில் பாஜக மிகவும் வருத்தப்படுகிறது என்றும், நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்ட கூடிய தேர்வாக உள்ள நிலையில் அரசியல் காரணங்களுக்காக திமுக நீட் தேர்வை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

2021 ல் மட்டும் ஏன் மாணவர்கள் இறக்க வேண்டும் என் கேள்வி எழுப்பிய அவர் நீட் வராது என திமுக உறுதி அளித்ததன் காரணமே மாணவர்கள் இறப்புக்கு காரணம் என்றார். நீட் தேர்வில் மட்டும் அல்லாமல் மற்ற படிப்புகளிலும் முறைகேடு நடப்பதாக தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் தற்போதைய கூட்டணி சுமூக செல்வதாகவும், 22 ஆம் தேதிக்குள் இடங்கள் முடிவு செய்யப்படும் என் கூறினார்.


latest tamil news




மேலும் பெட்ரோல் டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், பெட்ரோல் டீசல் விலையை கட்டிப்பாடிற்குள் கொண்டுவர..மாநில அரசு ஜி எஸ் டி வரிக்குள் கொண்டுவர ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றார். உள்ளாட்சி தேர்தலை ஒரே தேதியில் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் எந்த தவறும் இல்லை எனவும், அதிமுக நிர்வாகிகள் வீடில் லஞ்ச சோதனை என்பது திமுக வின் அரசிய காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
20-செப்-202117:27:51 IST Report Abuse
Subramanian Sundararaman நவோதயா பள்ளிகளை தமிழக கிராம பகுதிகளில் நிறுவ மாநில அரசு சம்மதித்தால் அந்த மாணவர்கள் பல மாநிலங்களில் உள்ளவர்களை போல எளிதாக தேர்வு பெற முடியும் . அது மத்திய அரசு செலவில் வருவதால் மாநில அரசுக்கும் சுமை இல்லை . உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருக்குமானால் நவோதயா பள்ளிகளை உடனடியாக அனுமதித்து சமூக நீதியை நிலை நாட்டட்டும் . இல்லையேல் நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்து காலம் கடத்தி மாணவர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கவும் . அரசியலா மாணவர் வாழ்க்கையா என்பது அரசின் கையில் .
Rate this:
Cancel
20-செப்-202113:49:15 IST Report Abuse
மதுமிதா சமூகநீதி என்ற வார்த்தையை திமுக திக தலைவர் கண்டு பிடித்த வார்த்தை யாக நினைப்பர். திரா...விடமம் என்ற வார்த்தையும் அப்படியே.
Rate this:
Cancel
Mohamed Malick - Dubai,இந்தியா
20-செப்-202112:42:07 IST Report Abuse
Mohamed Malick முதல உன் முதலாளிய பன்னிரெண்டாவது பரிச்சை எழுதி பாஸ் பண்ண சொல்லு அப்புறம் நீ பேசறதை நேரம் இருந்தா காது குடுத்து கேட்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X