பொது செய்தி

இந்தியா

கோவாக்சினுக்கு அனுமதி: அடுத்த மாதம் பரிந்துரை

Updated : செப் 21, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத்:'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசிக்கான நிபுணர்கள் ஆலோசனை குழு, அடுத்த மாதம் கூட்டம் நடத்தி பரிந்துரை அளிக்க உள்ளது.'கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் - வி' ஆகிய தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், தெலுங்கானாவின்
 கோவாக்சினுக்கு, அனுமதி, அடுத்த மாதம், பரிந்துரை

ஐதராபாத்:'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசிக்கான நிபுணர்கள் ஆலோசனை குழு, அடுத்த மாதம் கூட்டம் நடத்தி பரிந்துரை அளிக்க உள்ளது.

'கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் - வி' ஆகிய தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வினியோகித்து வருகிறது.

இந்த கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டு பட்டியலில் சேர்த்து அனுமதி அளிக்க, உலக சுகாதார நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கும், தடுப்பூசிக்கான நிபுணர்கள் ஆலோசனை குழு அடுத்த மாதம் கூட உள்ளது.அப்போது, அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி பெறுவதற்கு முன் செய்யப்பட்ட ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகள் மற்றும் பயன்பாட்டுக்கு வந்த பின்பான செயல் திறன் உள்ளிட்டவையை, நிபுணர்கள் குழு ஆய்வு செய்து பரிந்துரை அளிக்கும். அதன்பின், கோவாக்சினுக்கான அனுமதி வழங்குவது குறித்து உலக சுகாதார நிறுவனம் முடிவை அறிவிக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-செப்-202105:44:11 IST Report Abuse
Kasimani Baskaran ஏற்றுமதி செய்து இந்தியா பணம் சம்பாதித்தால் இவர்களுக்கு அது ஒரு பெரிய பிரச்சினை. சீனாவின் கட்டுப்பாட்டில் உலக சுகாதார அமைப்பு இயங்குக்வது தெளிவாகத் தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X