காங்., ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதல்வர்கள்...அடுத்தடுத்து மாற்றம்?:பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கரிலும் அதிரடி

Updated : செப் 21, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பபுதுடில்லி:பஞ்சாபில் முதல்வர் அதிரடியாக மாற்றப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் முதல்வர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி தலைமையின் பேச்சை மதிக்காமல் செயல்பட்டால், அமரீந்தர் சிங்குக்கு ஏற்பட்ட நிலையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும்
காங்., ஆட்சி,  மாநில முதல்வர்கள், அடுத்தடுத்து மாற்றம்?

பபுதுடில்லி:பஞ்சாபில் முதல்வர் அதிரடியாக மாற்றப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் முதல்வர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சி தலைமையின் பேச்சை மதிக்காமல் செயல்பட்டால், அமரீந்தர் சிங்குக்கு ஏற்பட்ட நிலையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும் ஏற்படக்கூடும் என, கட்சி தலைமை மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்., ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, உட்கட்சி பூசல் காரணமாக, முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். பஞ்சாப் அமைச்சரவையில் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக உள்ள சரண்ஜித் சிங் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் நடந்த இந்த அதிரடி அரசியல் மாற்றம், காங்., ஆட்சி நடக்கும் மற்ற மாநில முதல்வர்களுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி அமைச்சரவையை விஸ்தரித்து தன் ஆதரவாளர்களுக்கு பதவிகள் வழங்கும்படி சச்சின் பைலட் கோரிக்கை விடுத்து வருகிறார்.இது குறித்து அசோக் கெலாட்டிடம் காங்., தலைமை பேசியும், அமைச்சரவையை விரிவு படுத்தாமல் அவர் காலம் தாழ்த்தி வருகிறார்.சத்தீஸ்கரிலும் முதல்வர் பூபேஷ் பாகேல் - சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ இடையே மோதல் நிலவி வருகிறது.

முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள பூபேஷ் பாகேல் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலகாமல் தொடர்வது, மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் அரசியல் அதிரடி வாயிலாக ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுக்கு, காங்., தலைமை மறைமுக எச்சரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.

கட்சி தலைமையின் உத்தரவுகளை மதிக்கவில்லை எனில், யாராக இருந்தாலும் இந்த நிலை தான் என்பதை, அவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தி உள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.எந்த நேரத்திலும் மேலிடப் பார்வையாளர்கள் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சென்று அதிரடிகளை அரங்கேற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.

மேலும், கட்சி தலைமைக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் 23 மூத்த அதிருப்தியாளர்களுக்கும் சோனியா விடுக்கும் எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது. 'காங்கிரசை பொறுத்தவரை, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் மாநில முதல்வர்களை காட்டிலும், சோனியாவுக்கு விசுவாசமாக இருக்கின்றனர். 'எனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதல்வர்கள் அதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்' என, காங்., தலைவர்கள் சிலர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கின்றனர்.


ராகுலை தலைவராக்க தீர்மானம் நிறைவேற்றம்

காங்., சமூக வலைதள பிரிவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 'காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இது குறித்து, காங்., சமூக வலைதள பிரிவின் தலைவர் ரோஹன் குப்தா கூறியதாவது:காங்., தொண்டர்களுடன் ராகுல் தொடர்ந்து உரையாடி வருகிறார். மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சமூக வலைதள பிரிவு தொண்டர்களின் பணியை ராகுல் பாராட்டினார்.

ராகுலின், 'நியாய்' போன்ற திட்டங்களே நாட்டுக்கு தற்போதைய அவசிய தேவையாக உள்ளது. எனவே, காங்., தலைவராக அவர் பொறுப்பேற்றால், அது கட்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். எனவே, ராகுலை தலைவராக்க கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
20-செப்-202108:53:41 IST Report Abuse
duruvasar சும்மா இருங்கைய்யா. நேத்து தான் ஆஸ்திரேலியாவிலிருக்கும் ஒரு அரசியல் ஆய்வளார் பிஜேபிக்கு தேர்தல் பயம் வந்ததால் முதல்வரை மாற்றுகிறார்கள் என்று பகுத்தறிந்து எழுதி பலரின் பாராட்டையும், கைதட்டலையும் பெற்றிருக்கிறார். இப்படியெல்லாம் ஊக செய்திகளை போட்டு நீட் மாணவர்களை தற்கொலைக்கு தள்ளுவது போல் அவரையும் முடிவெடுக்க செய்து ஒரு தலைசிறந்த அறிவு ஜீவியை எங்களிடமிருந்து பிரித்து விடாதீர்கள்.
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
20-செப்-202106:24:14 IST Report Abuse
கௌடில்யன் சுழற்சி முறையில் எல்லா MLA க்களும் முதல்வராக வழி செய்ய வேண்டும் ..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-செப்-202105:37:26 IST Report Abuse
Kasimani Baskaran புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல இவர்கள் பாஜகவை காப்பி அடித்து முதல்வர்களை மாற்ற முயல்கிறார்கள். போலி விவசாயிகளை வைத்து இவர்கள் போடும் நாடகங்களை பொது மக்கள் அறிவார்கள். கேவலமான நடவடிக்கைகளின் காரணமாக நிச்சயம் காங்கிரசின் பலம் குறையும் என்று சொல்லலாம். எதிர்க்கட்சி என்று தன்னை மார்தட்டிக்கொள்ளும் காங்கிரசின் பலம் குறைவது நாட்டுக்கு நல்லதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X