மாநில அரசை எச்சரிக்கிறார் பிஷப்; தவறேதுமில்லை! சொல்கிறார் மத்திய இணை அமைச்சர்

Updated : செப் 21, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
திருவனந்தபுரம்:வெளியுறவுத் துறை இணையமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான முரளீதரன், ''மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில் பிஷப் பேசவில்லை. ''இந்த சமூகத்துக்கும், மாநிலத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இது மிக தீவிரமான பிரச்னை. மாநில அரசு உடனடியாக தலையிட்டு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்,'' என்றார்.கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த
மாநில அரசை, எச்சரிக்கிறார் பிஷப், தவறேதுமில்லை!, மத்திய இணை அமைச்சர்

திருவனந்தபுரம்:வெளியுறவுத் துறை இணையமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான முரளீதரன், ''மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில் பிஷப் பேசவில்லை.

''இந்த சமூகத்துக்கும், மாநிலத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இது மிக தீவிரமான பிரச்னை. மாநில அரசு உடனடியாக தலையிட்டு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்,'' என்றார்.கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பிஷப், 'மாநிலத்தில் லவ் ஜிகாத், போதைப் பொருள் ஜிகாத் மூலம் இளம் பெண்களை வேட்டையாடி வருகின்றனர்' என பேசியது, பெரும் பிரச்னையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ., மிக தீவிரமாக செயல்படுவதால், கேரள அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.


பெரும் சர்ச்சை

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கோட்டயத்தின் பாலா பகுதியில் உள்ள சர்ச்சின் பிஷப், மாற ஜோசப் கலரங்காட், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'மாநிலத்தில் இளம் ஹிந்து, கிறிஸ்துவ பெண்களை குறி வைத்து லவ் ஜிகாத் மற்றும் போதைப் பொருள் ஜிகாத் நடத்தப்படுகிறது' என, குறிப்பிட்டார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பேச்சுக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், எதிர்க்கட்சியான காங்.,கும் எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், 'பிஷப் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை' என, முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.இந்தப் பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், பிஷப்புக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்யும்படியும், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு, கட்சியின் கேரள மாநில பொதுச் செயலர் ஜார்ஜ் குரியன் கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான முரளீதரன் கூறியுள்ளதாவது:மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில் பிஷப் பேசவில்லை. மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ மக்களை எச்சரிக்கை செய்யும் வகையிலேயே அவரது பேச்சு உள்ளது.பிஷப்பின் பேச்சு இந்த சமூகத்துக்கும், மாநிலத்துக்கும் விடுக்கப்பட்டு உள்ள எச்சரிக்கையாகும். இது மிக தீவிரமான பிரச்னை.

மாநில அரசு உடனடியாக தலையிட்டு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிஷப்பின் பேச்சுக்கு முஸ்லிம்களிடம் இருந்து தான் ஆட்சேபனை வந்திருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரானதாக சித்தரிக்கும் அரசியல் இங்கு நடக்கிறது. இது எந்த மதத்தினருக்கும், பிரிவினருக்கும் எதிரான பேச்சல்ல. ஜிகாத் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் எச்சரிக்கையுடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய தகவல்களை மாநில அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மத மாற்றம்

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான கே.ஜே. அல்போன்ஸ் கூறியுள்ளதாவது:மாநிலத்தில் பயங்கரவாதம் வளர்வதற்கு கம்யூ., மற்றும் காங்., கூட்டணிகளே முக்கிய காரணம். கேரளாவை கடந்த 25 ஆண்டுகளில் மற்றொரு தலிபான் ராஜ்ஜியமாக்க இவர்கள் முயற்சித்து வருகின்றனர். அடுத்த 5 - 10 ஆண்டுகளுக்குள் கேரளா, தலிபானாகவே மாறும் அபாயம் உள்ளது.

ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்களை சேர்க்கும் மையமாக கேரளா மாறி வருகிறது. மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்களை திருமண ஆசை உட்பட பல வகைகளில் தங்களுடைய வலையில் விழ வைத்து விடுகின்றனர். பெண்களை பயங்கரவாத அமைப்புக்காக பணியாற்றவும், மற்ற வேலைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காக, கேரளாவில் இருந்து அதிகமானோர், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக புகார் உள்ளது. மேலும் இதற்காக, லவ் ஜிகாத் எனப்படும் காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி மத மாற்றம் செய்வதும் கேரளாவில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட பல அமைப்புகள் ஏற்கனவே விசாரித்து வருகின்றன.

இந்த நிலையில் போதைப் பொருள் ஜிகாத்தும் நடப்பதாக கேரள பிஷப் குற்றஞ்சாட்டியுள்ளார். இது, முதல்வர் பினராயி விஜயனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


பிஷப் பேசியது என்ன?

பாலா சர்ச்சின் பிஷப் மாற ஜோசப் கலரன்காட் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:ஜிகாதிகளின் பார்வையில் மற்ற மதத்தினர் அழிக்கப்பட வேண்டும். தங்களுடைய மதத்தை வளர்ப்பதற்காக, மற்ற மதத்தினரை அழிக்க ஜிகாதிகள் பல வழிகளை பயன்படுத்துகின்றனர்.அதில் குறிப்பாக லவ் ஜிகாத் மற்றும் போதைப் பொருள் ஜிகாத் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஹிந்து, கிறிஸ்துவ இளைஞர்களை தங்கள் வலையில் விழ வைக்க, போதைப் பொருளை வினியோகிக்கின்றனர்.மாநிலத்தின் பல இடங்களில் தற்போது போதைப் பொருள், 'பார்ட்டி' நடத்தப்படுவதற்கு இதுவே காரணம். இதைத் தவிர, ஹிந்து மற்றும் கிறிஸ்துவ இளம் பெண்களை தங்கள் வலையில் விழ வைக்க, லவ் ஜிகாத் நடத்துகின்றனர். காதலிப்பதாக, திருமணம் செய்வதாக ஆசைகாட்டி, தங்கள் மதத்துக்கு மாற்றுகின்றனர்.

அவ்வாறு மதம் மாறும் பெண்களை பயங்கரவாத செயல்களிலும், பிற வழிகளில் பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்துகின்றனர்.மாநிலத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து உள்ளது. ஓட்டல், ஐஸ்கிரீம் பார்லர், ஜூஸ் கடைகள் பெரும்பாலும் இதுபோன்ற ஜிகாதிகளாலேயே நடத்தப்படுகின்றன. அங்கிருந்தே போதைப் பொருள் பழக்கம், புழக்கம் துவங்குகிறது.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
20-செப்-202115:21:29 IST Report Abuse
அசோக்ராஜ் கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா இணைந்த ஆபிரகாமிய ஒன்றியம் உருவாக்க தேவையான நடவடிக்கைகள் ஏகதேசம் எடுக்கப்பட்டு விட்டன. மோடி அரசு குறட்டை விட்டு உறங்கிக்கொண்டு இருக்கிறது. லோக்கல் தலிபான்கள் Direct Action Day அறிவிக்கும் போது இந்துக்கள் ஓடித் தப்புவதற்கு இடம் இருக்காது.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
20-செப்-202114:38:17 IST Report Abuse
Sivagiri எல்லா இடங்களிலும் கூம்பு ஒலிபெருக்கி தடை செய்யப் பட்டு விட்டது . . தீமுக-கூட பயன்படுத்துவது இல்லை - - ஆனால் மசூதிகளில் மட்டும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கூம்பு ஒலிபெருக்கிகள் அலறுவது தடுக்க முடியவில்லை - உச்சநீதிமன்றம் தடைவிதித்த பின்னும் ? ? . . நமாஸ் மட்டுமல்ல - மோசமான பிரச்சாரங்களும் மிரட்டல்களும் தினமும் அலறுகின்றன -
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
20-செப்-202114:24:28 IST Report Abuse
unmaitamil பிஷப் சொல்வது முற்றிலும் உண்மை. சிறிது நாட்களுக்கு முன்பு லட்சத்தீவில் கேரளாவிற்கு செல்லவிருந்த படகில் 2000, கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள்கள் பிடிக்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள்கள் லட்ச தீவில் பிடிபட்டது. இவையெல்லாம் கேரளா, தமிழகத்திற்கு கடத்தப்பட இருந்த போதை மருந்துகள்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X