கட்சியை பாதிக்கும் வகையில் அமரீந்தர் சிங் முடிவெடுக்கமாட்டார்: அசோக் கெலாட் நம்பிக்கை

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஜெய்பூர்: “கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று நம்புகிறேன். இது போன்ற சமயங்களில் ஒருவர் தன் மனம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.” என ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவுறுத்தியுள்ளார்.பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு

ஜெய்பூர்: “கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று நம்புகிறேன். இது போன்ற சமயங்களில் ஒருவர் தன் மனம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.” என ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவுறுத்தியுள்ளார்.



latest tamil news




பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளர் என்றிருந்த நிலையில், கட்சி மேலிட உத்தரவால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் ஏற்பட்ட வெளிப்படையான அதிகார மோதலை தொடர்ந்து இந்த அதிரடி சம்பவம் நடந்துள்ளது. தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முடிவு செய்வேன் என கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இதனால் பஞ்சாபில் ஆட்சி கவிழுமோ என்ற அச்சம் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே உள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று நம்புகிறேன். கட்சி தன்னை முதல்வராக்கியது மற்றும் ஒன்பதரை ஆண்டுகள் முதல்வராக தொடர அனுமதித்தது என்று அவரே கூறியுள்ளார். அவர் தன்னால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்றியுள்ளார். சில சமயங்களில் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொது மக்களின் கருத்துகளின் அடிப்படையில் கட்சியின் நலன் கருதி மேலிடம் முடிவுகளை எடுக்கும்.
முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கும் பல தலைவர்களின் அதிருப்தியினால் காங்கிரஸ் தலைவர் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கிறார். அதே சமயம் அந்த முதல்வர் மாற்றப்படும் போது அவர் அதிருப்தி அடைந்து, தவறான முடிவை எடுப்பார்கள். அத்தகைய தருணங்களில் ஒருவர் தனது மனம் சொல்வதை கேட்க வேண்டும். பாசிச சக்திகளால் நாடு எந்த திசை நோக்கி செல்கிறது என்ற கவலை அனைத்து மக்களுக்கும் உள்ளது.


latest tamil news





அசோக் கெலாட் நம்பிக்கை



இதுபோன்ற நேரங்களில் நாட்டு நலனில் அனைத்து காங்கிரஸ்காரர்களின் பொறுப்பும் அதிகரிக்கிறது. தன்னை விட ஒருவர் நாட்டின் நலன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும். கேப்டன் அமரீந்தர் சிங் கட்சி நலனுக்காக பணியாற்றுவார் என நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
20-செப்-202116:52:45 IST Report Abuse
vbs manian இவர் தலை மீதே கத்தி தொங்குகிறது. ஊருக்கு உபதேசம்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
20-செப்-202112:34:25 IST Report Abuse
Soumya ஐயா நீங்க பாடுற பாயாசம் ( பாசிசம் ) பாட்டு மக்களுக்கு புரியலையாம் நல்லா தெளிவா பாடுங்க
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
20-செப்-202109:18:32 IST Report Abuse
Nagarajan D இருங்க கெஹலோட் அவர்களே... இன்னும் சில நாட்களில் நீங்களும் முன்னாள் முதல்வர் தான் உங்களுக்கும் ஒரு மாற்று தயார் செய்தாகிவிட்டதாம்.... உங்க கம்பெனி முதலாளி முடிவு கட்டுப்பட்டு நடக்க போகிறீர்களா என்று பார்ப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X