தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம்

Updated : செப் 21, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 11 மாநிலங்களில் மிகவும் ஆபத்தான வகை டெங்கு பரவி மிரட்டி வருகிறது. இந்த மாநிலங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல் சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது. நம் நாட்டிலும்
 தமிழகம், உட்பட, 11 மாநிலங்களில், டெங்கு காய்ச்சல், பரவல் தீவிரம்

புதுடில்லி:கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 11 மாநிலங்களில் மிகவும் ஆபத்தான வகை டெங்கு பரவி மிரட்டி வருகிறது. இந்த மாநிலங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல் சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது. நம் நாட்டிலும் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 'செரோ டைப் 2' என்ற மிகவும் ஆபத்தான வகை டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நடந்த மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் கொரோனா, டெங்கு பரவல் தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மிகவும் ஆபத்தான வகை டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட 11 மாநிலங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

பரிசோதனை முகாம்களை அதிகரிப்பது, தேவையான மருந்துகளை இருப்பு வைப்பது, பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விடுவது ஆகிய நடவடிக்கைகளை செயல்படுத்த, 11 மாநில அதிகாரிகளுக்கும், மத்திய அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
20-செப்-202109:11:46 IST Report Abuse
duruvasar நல்லாட்சிக்கு களங்கம் கற்பிக்க தீயசக்திகள் ஏவிவிடும் சாத்தான்கள் தான் இந்த கொசுக்கள். பாலிடாயில் புகை மூட்டம் அடித்தால் அப்பறம் அத்தனையும் நம் கைவசம். யாரங்கே. . . . .
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-செப்-202105:08:51 IST Report Abuse
Mani . V அரசியல்வாதிகள்: "எது வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அதை காரணம் காட்டி சில ஆயிரம் கோடியை ஆட்டையை போட்டு விடுவோம்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X