தமிழ்நாடு

லீவு கிடைக்காத போலீஸ் கடுப்பு! சாமி வரம்! கொடுத்தாலும் 'பூசாரிகள்' மறுப்பு...

Updated : செப் 20, 2021 | Added : செப் 19, 2021
Share
Advertisement
போலீசில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயரதிகாரிகள் வரை தொடர் பணி, வேலைப்பளு உட்பட பல்வேறு காரணங்களால், மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.இதன் காரணமாக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடமும், பொது இடங்களிலும் சில போலீசார் கடுமையாக நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்து வந்தன.போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா, உடற்பயிற்சிகள்
லீவு கிடைக்காத போலீஸ் கடுப்பு! சாமி வரம்! கொடுத்தாலும் 'பூசாரிகள்' மறுப்பு...

போலீசில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயரதிகாரிகள் வரை தொடர் பணி, வேலைப்பளு உட்பட பல்வேறு காரணங்களால், மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.இதன் காரணமாக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடமும், பொது இடங்களிலும் சில போலீசார் கடுமையாக நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்து வந்தன.போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா, உடற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இச்சூழலில், தமிழக டி.ஜி.பி., இரண்டு மாதங்களுக்கு முன் போலீஸ் உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை போலீசார் வரை, அனைத்து போலீசாருக்கும் சுழற்சி முறையில் வார விடுமுறையும் வழங்க உத்தரவிட்டார்.இதன் தொடர்ச்சியாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், மாநகரில் உள்ள போலீசாருக்கு வார விடுமுறையை அறிவித்தார். துணை கமிஷனர்கள் முதல் காவலர்கள் வரை, சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க உத்தரவிட்டார்.

இதன்படி துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்., ஆகியோர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வார விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு கமிஷனர் அலுவலகம் மூலம் விடுமுறை வழங்கப்படும்.சுழற்சி முறையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், விடுமுறை அளிக்கப்படும். விடுமுறையில் உள்ள அதிகாரிகளின் பணியை, அன்று பணியில் உள்ள அதே 'ரேங்க்' உடைய அதிகாரிகள், கூடுதலாக கவனித்து கொள்ள வேண்டும்.

மற்ற காவலர்களுக்கு அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் வார விடுமுறையை ஒதுக்கி அதற்கான அட்டவணையை, கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.இந்த வார விடுமுறை திட்டம் அமலுக்கு வந்து, இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில், எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ., தலைமை காவலர் மற்றும் கீழ்நிலை போலீசார் தங்களுக்கு ஓரவஞ்சனை நடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, கீழ்நிலை போலீசார் சிலர் கூறுகையில், 'மாநகரில் கமிஷனர் அறிவித்த வார விடுமுறையை இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சரியாக எடுத்து கொள்கின்றனர்.
இவர்களின் விடுமுறை அறிவிப்பு, கமிஷனர் அலுவலகம் மூலம் வழங்கப்படுவதால் எவ்வித தடையுமின்றி வாரந்தோறும் விடுமுறை எடுத்து கொள்கின்றனர். அதேநேரம் மற்ற காவலர்களுக்கு, அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் தான் வார விடுமுறை ஒதுக்க வேண்டும்.ஆனால், பல ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு வார விடுமுறையே வழங்குவதில்லை. இதுகுறித்து அவர்களை எதிர்த்து கேட்க முடியாத நிலை உள்ளது. இதனை மீறி ஏதாவது கேட்டால், எங்களை பழிவாங்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

இந்த விபரங்கள் கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும் எதுவும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என தெரியவில்லை' என்றனர்.இப்புகார் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரிடம் கேட்டபோது, ''இதுபோன்ற புகார்கள் எதுவும், என் கவனத்துக்கு வரவில்லை. விசாரிக்கிறேன். ஏதேனும் குறிப்பிட்ட நிகழ்வுகள் இருந்தால் போலீசார் நேரடியாக என் கவனத்துக்கு கொண்டு வரலாம்,'' என்றார்.பார்க்கலாமே...இனியாவது விடுமுறை கிடைக்கிறதா என்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X