அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்... அமைச்சரவை மாற்றம்?'கெத்து' காட்டுவோரை அகற்ற முடிவு பட்டியல் தயாரிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Updated : செப் 20, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்குப் பின், தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, 'கெத்து' காட்டி வரும் அமைச்சர்கள் சிலரை நீக்கி விட்டு, புதியவர்களை சேர்க்க திட்டமிட்டு, அதற்கான பட்டியலை முதல்வர் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது, சில அமைச்சர்கள் மற்றும்
உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்...  அமைச்சரவை மாற்றம்?'கெத்து' காட்டுவோரை அகற்ற முடிவு பட்டியல் தயாரிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்குப் பின், தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, 'கெத்து' காட்டி வரும் அமைச்சர்கள் சிலரை நீக்கி விட்டு, புதியவர்களை சேர்க்க திட்டமிட்டு, அதற்கான பட்டியலை முதல்வர் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது, சில அமைச்சர்கள் மற்றும் பதவிக்காக காத்திருக்கும் எம்.எல்.ஏ.,க்களின் துாக்கத்தை கெடுத்துள்ளது.

அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா இருந்தவரை, அமைச்சரவை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படும் என்ற நிலை இருந்தது. எனவே, அமைச்சர்கள் அடக்கி வாசித்ததுடன், பயத்துடனேயே இருந்தனர். அவரது மறைவுக்கு பின், அந்த பயம் அ.தி.மு.க.,வில் காணாமல் போனது.


'கல்லா' கட்டுவதில் குறி

வழக்கமாக, தி.மு.க., அமைச்சரவையிலும் அடிக்கடி மாற்றம் இருப்பதில்லை. 10ஆண்டு இடைவெளிக்கு பின், தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ளதால், முதல் முறையாக ஸ்டாலின் முதல்வரானார். அவரது அமைச்சரவையில், 33 பேர் உள்ளனர். எனினும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. சமூக நீதி குறித்து பேசி வரும் நிலையில், பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

தமிழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர்கள் அனைவரும் தங்கள் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். சில அமைச்சர்கள், முதல்வரின் எண்ணத்திற்கேற்ப அடக்கி வாசிக்கும் நிலையில், சிலர் 'கல்லா' கட்டுவதில் குறியாக உள்ளதாகவும், அ.தி.மு.க., 'மாஜி'க்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.

முன்னாள் அமைச்சர்கள் சிலரின் ஊழல்களை அம்பலப்படுத்தி, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்பது தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்ற, மாஜிக்கள் வீடுகளில் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாஜி வேலுமணியை, எப்படியாவது வலையில் சிக்க வைக்க, ஆளும் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எல்லா வழிகளிலும் அவருக்கு, ஆளும் அமைச்சரே உதவும் அதிர்ச்சி தகவல் மேலிடத்திற்கு கிடைத்திருக்கிறது.

தேர்தலுக்கு முன் ஏற்பட்ட இந்த பந்தம் காரணமாக, வேலுமணி எந்த பயமும் இல்லாமல் இருப்பதாக தகவல்.அது மட்டுமின்றி, அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், மாஜி விரும்புகிற எல்லா பணிகளும் அங்கு நடந்து வருவதால், கொங்கு தி.மு.க.,வினர் நொந்து போய் உள்ளனர்.


ரகசிய உறவு

ஆழியாறு குடிநீர் வினியோக திட்டம், கலெக்டர்கள் நியமனம் என, அவர் கேட்டதெல்லாம் நிறைவேறிய செய்தியும், ஆளும் மேலிடத்தை எட்டியிருக்கிறது.சட்டசபை தொடரின் போதும், இரு தரப்பில் சிலருக்கு இடையிலான ரகசிய உறவு அவ்வப்போது வெளிப்பட்டுள்ளது. முதல்வர் வருவதற்கு முன், அமைச்சர்களுடன் அமர்ந்து, அ.தி.மு.க., மாஜிக்களும், எம்.எல்.ஏ.,க்களும் பேசுவதும், முதல்வர் வந்ததும் கலைந்து விடுவதும் கண்கூடாக நடந்திருக்கிறது.


எச்சரிக்கை

இதையெல்லாம் அறிந்து கடுப்படைந்த முதல்வர், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கண்டித்ததுடன், 'பொது வெளியிலும் கண்காணித்து வருகிறேன்; செயல்பாடுகள் சரியில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்' என்று எச்சரிக்கையும் விடுத்துஉள்ளார்.இந்த சூழ்நிலையில், சில அமைச்சர்களை மாற்றவும், ஏழு அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றி அமைக்கவும் முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் உதயநிதிக்கு, அனைவரும் முக்கியத்துவம் அளிப்பது, விவாதப் பொருளாகி வருகிறது. இதை தவிர்க்க, அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, குடும்பத்திலும், கட்சியிலும் வலியுறுத்தப்படுகிறது.அதேபோல, சேலம் மாவட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இது போன்ற எல்லா விவகாரங்களுக்கும் தீர்வு காணும் வகையில், அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.அடுத்த மாதம் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்குப் பின், இந்த மாற்றம் இருக்கலாம் என்றும், அதற்கான பட்டியலை முதல்வர் ஸ்டாலின் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
21-செப்-202100:19:54 IST Report Abuse
r ravichandran திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்தில் ரிசர்வு வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உட்பட 5 பொருளாதார ஆலோசகர் நியமனம். பொருளாதார நிபுணர் என்று தன்னை அழைத்து கொள்ளும் கல்லூரி பேராசிரியர் ஜெயராம் ரஞ்சன் தலைமையில் 8 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு எங்கே தூங்கி கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
21-செப்-202100:14:09 IST Report Abuse
r ravichandran திரு பழனிவேல் ராஜன் வெளிநாட்டில் பைனான்ஸ் கம்பனியில் வேலை முக்கியபொறுப்பில் வேலை பார்த்தவர் தான். ஆனால் பொருளாதார நிபுணர் இல்லை. இவரது பேச்சுகள், விமர்சனங்கள் மிகவும் தரம் தாழ்ந்து உள்ளது.
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
21-செப்-202115:18:46 IST Report Abuse
Nellai Raviசார் அவர் அங்கு என்ன வேலைல இருந்தார் ?...
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
21-செப்-202100:08:26 IST Report Abuse
r ravichandran பெட்ரோல் விற்பனையை GST க்குள், கொண்டு வந்தால் 78 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைத்து விடும். ஆனால் தமிழ் நாடு உட்பட எல்லா மாநிலங்கலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மாநில வருமானம் போய்விடும் என்று. திமுக ஆட்சிக்கு வரும் முன்னர், பெட்ரோல் விற்பனையை GST குள், கொண்டு வரமுடியாத அதிமுக அடிமை அரசு என்றும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் GST குள் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X