அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பீதியை ஏற்படுத்த கூடாது: அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : செப் 21, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
திருப்பூர்: ''மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாக, தேவையற்ற பீதியை ஏற்படுத்தக் கூடாது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.திருப்பூரில் தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேற்று பார்வையிட்ட அவர் கூறியதாவது:மத்திய அரசு 'கோவிஷீல்டு' 4 லட்சம் 'டோஸ்' அனுப்பினால், 'கோவாக்சின்' 1.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாகவே அனுப்புகிறது. இதனால்,
கொரோனா பீதியை ஏற்படுத்த கூடாது: அமைச்சர் சுப்பிரமணியன்

திருப்பூர்: ''மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாக, தேவையற்ற பீதியை ஏற்படுத்தக் கூடாது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திருப்பூரில் தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேற்று பார்வையிட்ட அவர் கூறியதாவது:மத்திய அரசு 'கோவிஷீல்டு' 4 லட்சம் 'டோஸ்' அனுப்பினால், 'கோவாக்சின்' 1.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாகவே அனுப்புகிறது. இதனால், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசியை எங்கும், யாருக்கும் செலுத்துவதில்லை. இன்னமும் 18 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை செலுத்த வேண்டியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை, 100க்கும் கீழ் தான். மாணவர்களுடன் இருந்தவர்களை பரிசோதித்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, மாணவர்களுக்கு தொற்று என்று தேவையற்ற பீதியை ஏற்படுத்தக் கூடாது.

ஒன்றரை ஆண்டாக மன அழுத்தத்தில் இருந்த மாணவர்கள், இப்போது தான் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். தமிழக - கேரள எல்லையான, மீனாட்சிபுரத்தில் ஆய்வு செய்த சுப்பிரமணியன் கூறுகையில், ''கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், எல்லையில் உள்ள 13 சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.'

'கேரள மாநிலத்தில் இருந்து வருவோர், கட்டாயம் கொரோனா தொற்றின்மை சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ''தமிழகத்தில் இதுவரை, ஜிகா, நிபா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகவில்லை,'' என்றார்.பொள்ளாச்சியில் ஆய்வுக்கு வந்த அமைச்சர், ஊஞ்சவேலாம்பட்டியில் இருந்து ராசக்காபாளையம் வரை, 'ஜாக்கிங்' சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
20-செப்-202120:46:06 IST Report Abuse
sankar கோவில்களை மூடி பீதியை ஏற்படுத்துவது யாரோ?
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-செப்-202118:29:54 IST Report Abuse
elakkumanan கொரநா குறித்தோ அல்லது தடுப்பூசி குறித்தோ யாரும் பீதியை கிளப்பவேண்டாம்... மக்களிடம் அவநம்பிக்கையை விதைக்கவேண்டாம்...நீட் தேர்வு குறித்து அல்லது எந்த போட்டி தேர்வு குறித்தும் மாணவர்களிடம் குழப்பத்தையும் எதிர்மறை எண்ணத்தையும், தற்கொலை எண்ணத்தையும் விதைக்கவேண்டாம்....அரசின் நடவடிக்கைகளில் வேறு யாரும் தலையிடவேண்டாம்.................எங்களது பணியில் குறுக்கிட்டால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன் ................இப்படிக்கு.........டுமீல் பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு............
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
20-செப்-202114:17:28 IST Report Abuse
Nakkeeran தொற்றால் பாதிக்க பட்ட மாணவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவுதான் என எப்படி பெருமையாக கூறுகிறான் பாருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X