கொரோனா பீதியை ஏற்படுத்த கூடாது: அமைச்சர் சுப்பிரமணியன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பீதியை ஏற்படுத்த கூடாது: அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : செப் 21, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (12)
Share
திருப்பூர்: ''மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாக, தேவையற்ற பீதியை ஏற்படுத்தக் கூடாது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.திருப்பூரில் தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேற்று பார்வையிட்ட அவர் கூறியதாவது:மத்திய அரசு 'கோவிஷீல்டு' 4 லட்சம் 'டோஸ்' அனுப்பினால், 'கோவாக்சின்' 1.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாகவே அனுப்புகிறது. இதனால்,
கொரோனா பீதியை ஏற்படுத்த கூடாது: அமைச்சர் சுப்பிரமணியன்

திருப்பூர்: ''மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாக, தேவையற்ற பீதியை ஏற்படுத்தக் கூடாது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திருப்பூரில் தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேற்று பார்வையிட்ட அவர் கூறியதாவது:மத்திய அரசு 'கோவிஷீல்டு' 4 லட்சம் 'டோஸ்' அனுப்பினால், 'கோவாக்சின்' 1.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாகவே அனுப்புகிறது. இதனால், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசியை எங்கும், யாருக்கும் செலுத்துவதில்லை. இன்னமும் 18 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை செலுத்த வேண்டியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை, 100க்கும் கீழ் தான். மாணவர்களுடன் இருந்தவர்களை பரிசோதித்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, மாணவர்களுக்கு தொற்று என்று தேவையற்ற பீதியை ஏற்படுத்தக் கூடாது.

ஒன்றரை ஆண்டாக மன அழுத்தத்தில் இருந்த மாணவர்கள், இப்போது தான் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். தமிழக - கேரள எல்லையான, மீனாட்சிபுரத்தில் ஆய்வு செய்த சுப்பிரமணியன் கூறுகையில், ''கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், எல்லையில் உள்ள 13 சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.'

'கேரள மாநிலத்தில் இருந்து வருவோர், கட்டாயம் கொரோனா தொற்றின்மை சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ''தமிழகத்தில் இதுவரை, ஜிகா, நிபா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகவில்லை,'' என்றார்.பொள்ளாச்சியில் ஆய்வுக்கு வந்த அமைச்சர், ஊஞ்சவேலாம்பட்டியில் இருந்து ராசக்காபாளையம் வரை, 'ஜாக்கிங்' சென்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X