அரசியல் செய்தி

தமிழ்நாடு

25 சதவீத இடம் கேட்கும் பா.ஜ., அ.தி.மு.க.,வுடன் பங்கீடு பேச்சு

Updated : செப் 21, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை:உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் 25 சதவீத இடங்கள் கேட்டு, அக்கட்சியின் மாநில நிர்வாகிகளிடம், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6, 9ல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.இட ஒதுக்கீடுதேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, விருப்ப மனுக்கள் பெற்று,
 25 சதவீத இடம் கேட்கும் பா.ஜ., அ.தி.மு.க.,வுடன் பங்கீடு பேச்சு

சென்னை:உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் 25 சதவீத இடங்கள் கேட்டு, அக்கட்சியின் மாநில நிர்வாகிகளிடம், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பேச்சு நடத்தினர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6, 9ல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.இட ஒதுக்கீடுதேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, விருப்ப மனுக்கள் பெற்று, அந்தந்த மாவட்ட செயலர்கள், அ.தி.மு.க., மேலிடத்தில் ஒப்படைத்து உள்ளனர். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, மாவட்ட அளவில் இட ஒதுக்கீடு செய்யும் பேச்சு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

இக்கூட்டத்தில், தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை அ.தி.மு.க., தரப்பிடம், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வழங்கினர். ஆனால், பா.ஜ., கேட்கிற இடங்களை தர, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் சம்மதிக்கவில்லை.இதையடுத்து, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில், நேற்று மாலை இடப்பங்கீடு பேச்சு மீண்டும் நடந்தது.


இறுதி முடிவு

அக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, விஸ்வநாதன், மாவட்ட செயலர்கள் ராஜேந்திரன்; தமிழக பா.ஜ., சார்பில் கராத்தே தியாகராஜன், வேதசுப்பிரமணியன், பலராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், கூட்டத்தில், 25 சதவீத இடங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில், இறுதி முடிவு எட்டப்பட்டதும், இட பங்கீட்டு விபரம் அறிவிக்கப்படும் என்று அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.


கூட்டணியில் மீண்டும் பா.ம.க.,

உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள ஒன்பது மாவட்டங்களில், தென்காசி, திருநெல்வேலியை தவிர மற்ற, ஏழு மாவட்டங்களில் வன்னியர் சமுதாய ஓட்டு வங்கி கணிசமாக உள்ளது.இந்த மாவட்டங்களில், பா.ம.க., இருந்தால் தான் தி.மு.க.,வை எதிர்கொள்ள முடியும் என, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து, ஏழு மாவட்டங்களில் பா.ம.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. நேற்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க., - பா.ம.க., நிர்வாகிகள் இட பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர்.

இது குறித்து, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், ''அ.தி.மு.க., தலைமை கேட்டுக் கொண்டதால், பா.ம.க., போட்டியிட விரும்பும் பட்டியலை கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு தேவையான இடங்களை கொடுத்தால், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
20-செப்-202123:53:44 IST Report Abuse
Anbuselvan பத்து சதவிகிதத்துடன் பாண்டிச்சேரி ராஜ்ய சபா MP டீல்.
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
20-செப்-202123:19:39 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN பாஜக தனித்து போட்டியிடம் வேண்டும், குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் பரவாயில்லை, தமிழகத்தில் வேர் ஊன்ற இதுவே சரியான தருணம். 50% கொடுத்தாலும் வேண்டாம்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
20-செப்-202118:46:59 IST Report Abuse
Rajas 25% இடமா. அவ்வளவு இடத்திலும் நிற்பதற்கு ஆட்கள் இருக்கிறார்களா. வேட்பாளர்களையும் அதிமுகவிடம் இருந்து கேட்டு வாங்கி கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X