பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி மனு தாக்கல் 3 நாள் மட்டுமே அவகாசம்

Added : செப் 19, 2021
Share
Advertisement
சென்னை-ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்கு, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6, 9ல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான மனு தாக்கல்,

சென்னை-ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்கு, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6, 9ல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான மனு தாக்கல், 15ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; 22ம் தேதி மாலை 5:00 மணியுடன் மனு தாக்கல் முடிகிறது. ஞாயிறு விடுமுறையால் நேற்று மனு தாக்கல் நடக்கவில்லை.இன்று காலை 10:00 மணிக்கு மீண்டும் மனுதாக்கல் துவங்க உள்ளது.

மூன்று நாட்களே அவகாசம் இருப்பதால், மனு தாக்கல் இன்று அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது; மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. மாவட்ட கலெக்டர்கள் உரிய கவனம் செலுத்தாததால், பல இடங்களில் பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, மாநில தேர்தல் ஆணையம் உரிய கவனம் செலுத்தி, பதவிகள் ஏலம் போவதை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X