பொது செய்தி

தமிழ்நாடு

வறண்டது மூல வைகை:

Added : செப் 20, 2021
Share
Advertisement
தேனி-வருஷநாடு மலைப் பகுதியில் மழை இல்லாததால், மூல வைகை ஆறு வறண்டு மணல் பரப்பாக உள்ளது.தேனி மாவட்டம், வருஷநாடு மலைப் பகுதியில் பெய்யும் மழையால் பல சிற்றாறுகள் இணைந்து, மூல வைகை ஆறாக வாலிப்பாறை, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனுார், குன்னுார் வழியாக வைகை அணையில் சேர்கிறது.தொடர்ந்து மழை இல்லாததால், ஆற்றின் நீர்வரத்து படிப்படியாக குறைந்து, தற்போது
 வறண்டது மூல வைகை:

தேனி-வருஷநாடு மலைப் பகுதியில் மழை இல்லாததால், மூல வைகை ஆறு வறண்டு மணல் பரப்பாக உள்ளது.

தேனி மாவட்டம், வருஷநாடு மலைப் பகுதியில் பெய்யும் மழையால் பல சிற்றாறுகள் இணைந்து, மூல வைகை ஆறாக வாலிப்பாறை, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனுார், குன்னுார் வழியாக வைகை அணையில் சேர்கிறது.தொடர்ந்து மழை இல்லாததால், ஆற்றின் நீர்வரத்து படிப்படியாக குறைந்து, தற்போது முற்றிலும் வறண்டு விட்டது.

இதனால், குடிநீர் கிணறுகளுக்கும், கரையோர விவசாய கிணறுகளுக்கும் நீர் சுரப்பு குறைந்து, பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுதவிர, வைகை அணை நீர் இருப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது. வைகை அணையின் மொத்த உயரமான 71 அடியில், நேற்று நீர்மட்டம் 56.33 அடியாக இருந்தது.பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 939 கன அடி நீர் வரும் நிலையில், வைகை அணை நீர் திறப்பு 1219 கன அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X