சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

இனி மீள முடியாது!

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021
Share
Advertisement
'அவரை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை' என, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயை பற்றி பேசுகின்றனர், அங்குள்ள அரசு அதிகாரிகள். கொரோனா பரவல் துவங்கியதிலிருந்தே ஒன்றரை ஆண்டுகளாக பெரும்பாலான தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தனர். முதல் அலை ஓய்ந்ததும், மீண்டும் அலுவலகங்களுக்கு வந்த
 அக்கம் பக்கம்

'அவரை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை' என, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயை பற்றி பேசுகின்றனர், அங்குள்ள அரசு அதிகாரிகள்.

கொரோனா பரவல் துவங்கியதிலிருந்தே ஒன்றரை ஆண்டுகளாக பெரும்பாலான தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தனர். முதல் அலை ஓய்ந்ததும், மீண்டும் அலுவலகங்களுக்கு வந்த அவர்கள், இரண்டாவது அலை துவங்கியதும் மீண்டும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி விட்டனர்.

இப்போது நாடு முழுதும் தொற்று பரவல் குறையத் துவங்கியுள்ளதால் பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளன. ஆனாலும் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து பழகி விட்ட இவர்களில் சிலரால், அதிலிருந்து மீள முடியவில்லை. இவர்களில் ஒருவர் தான் உத்தவ் தாக்கரே.

கொரோனா பரவல் துவங்கியதுமே, மும்பையில் உள்ள தன் பங்களாவுக்குள் இருந்தபடியே கோப்புகளில் கையெழுத்திட்டு வந்தார். இப்போது தொற்று பரவல் குறைந்தாலும், உத்தவ் தாக்கரே, தலைமைச் செயலகத்துக்கு செல்ல தயங்குகிறார். பல லட்சம் செலவில், 'வீடியோ கான்பரன்ஸ்' அறை, அதிகாரிகளுக்கான ஓய்வறை என பங்களாவை புதுப்பித்துள்ளார்.

இதைப் பார்த்த அதிகாரிகள், 'வீட்டில் இருந்து பணியாற்றிய பழக்கத்திலிருந்து இவரால் எளிதில் மீள முடியாது. குண்டுக்கட்டாக துாக்கி வந்து தலைமைச் செயலகத்தில் அமர்த்தினாலும், அடுத்த நொடியே வீட்டுக்கு ஓடி விடுவார்' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X