பொது செய்தி

இந்தியா

விதிமீறல் மதுபான பார்ட்டியில் போதைப்பொருள்

Added : செப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : ஆனேக்கல் புறநகரில் விதிமீறலாக நடந்த மதுபான பார்ட்டி நடந்த இடத்தில், போலீசார் சோதனையிட்டு பலரை கைது செய்தனர். பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்திய, அரைகுறை ஆடை அணிந்த பெண்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு ரூரல் ஆனேக்கல் புறநகரில் தனியார் சொகுசு விடுதியில் மதுபான பார்ட்டி நடந்தது. இதில் இளம்பெண்கள் அரைகுறை உடையுடன், ஆபாச நடனம் ஆடுவது, கஞ்சா உட்பட

பெங்களூரு : ஆனேக்கல் புறநகரில் விதிமீறலாக நடந்த மதுபான பார்ட்டி நடந்த இடத்தில், போலீசார் சோதனையிட்டு பலரை கைது செய்தனர்.

பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்திய, அரைகுறை ஆடை அணிந்த பெண்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு ரூரல் ஆனேக்கல் புறநகரில் தனியார் சொகுசு விடுதியில் மதுபான பார்ட்டி நடந்தது. இதில் இளம்பெண்கள் அரைகுறை உடையுடன், ஆபாச நடனம் ஆடுவது, கஞ்சா உட்பட மற்ற போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது.இது குறித்து தகவலறிந்த, ஆனேக்கல் போலீசார் நேற்று முன் தினம் நள்ளிரவு, சொகுசு விடுதிக்கு சென்று சோதனையிட்டனர்.

போலீசாரை கண்டவுடன், சில இளைஞர்கள், இளம் பெண்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.பார்ட்டியில் போதைப்பொருள் உட்கொண்டு, அரை நிர்வாணமாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த பார்ட்டியில் மாணவர்கள், பணக்கார வீட்டு பிள்ளைகள் பங்கேற்றிருந்தனர். பலர் போதைப்பொருள் உட்கொண்டது, கண்டுப்பிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 6 கார்கள், 15 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.ஆனேக்கல்லை தொடர்ந்து, தம்மநாயகனஹள்ளி அருகிலுள்ள சொகுசு விடுதியிலும் போலீசார் சோதனையிட்டனர். எனினும் அங்கு யாரும் கைது செய்யப்படவில்லை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X