பொது செய்தி

இந்தியா

அக்டோபர் இறுதிக்குள் முதல் டோஸ் தடுப்பூசி

Added : செப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, மெகா தடுப்பூசி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 31.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பத்து லட்சம் மக்கள்

பெங்களூரு : ''அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, மெகா தடுப்பூசி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 31.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பத்து லட்சம் மக்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், நாட்டில் மிக அதிகமாக தடுப்பூசி போட்ட மாநிலம் நம்முடையது.டிசம்பர் 15க்குள், அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். நடப்பாண்டு இறுதியில் தடுப்பூசி போடும் பணி முடியும்.

காங்கிரசுக்கு எந்த கொள்கையும் இல்லை. மக்களின் ஆரோக்கிய விஷயத்திலும், அரசியல் செய்வது ஈனத்தனமானது. கொரோனா தடுப்பூசி குறித்து, தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.பருவநிலை மாறும் போது காய்ச்சல் தென்படுகிறது. இதை மனதில் கொண்டு, குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மக்கள் பயப்பட தேவையில்லை.அனைத்து நடவடிக்கைகளும் துவங்கப்பட்டதால், காய்ச்சல் அளவு அதிகமாக தென்படுகிறது. குழந்தைகளுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X