பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 20, 2021
Share
Advertisement
செப்., 20, 1870சிவகங்கை அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில், 1870 செப்., -20ல் பிறந்தவர், ரா.ராகவையங்கார். மதுரை சேதுபதி உயர்நிலை பள்ளி, திருச்சி சேஷையங்கார் பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றினார். 'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாத அய்யரோடு ஏற்பட்ட நட்பு காரணமாக, பழந்தமிழ் சுவடிகளை பதிப்பிப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பல இடங்களுக்கும் சென்று, பழங்கால சுவடிகளைத்
 இதே நாளில் அன்று

செப்., 20, 1870

சிவகங்கை அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில், 1870 செப்., -20ல் பிறந்தவர், ரா.ராகவையங்கார். மதுரை சேதுபதி உயர்நிலை பள்ளி, திருச்சி சேஷையங்கார் பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றினார். 'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாத அய்யரோடு ஏற்பட்ட நட்பு காரணமாக, பழந்தமிழ் சுவடிகளை பதிப்பிப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பல இடங்களுக்கும் சென்று, பழங்கால சுவடிகளைத் திரட்டினார்.

ராமநாதபுர சேது சமஸ்தான மன்னர், பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்க ராசராஜேஸ்வர சேதுபதி, சண்முக ராஜேஸ்வர சேதுபதி என தாத்தா, தந்தை, பேரன் ஆகிய மூவரின் அரசவையிலும் புலவராக திகழ்ந்தார்.மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் துவங்கியபோது நுால்பதிப்பு, ஆராய்ச்சி துறைகளின் தலைவராக பொறுப்பேற்றார். 'செந்தமிழ்' இதழின் ஆசிரியராக பணியாற்றினார். 1935ல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், தமிழாராய்ச்சி துறை உருவாக்கப்பட்டபோது, முதன்மை ஆராய்ச்சியாளராக பதவி வகித்தார். 1946 ஜூலை 11ல், தன் 76வது வயதில் காலமானார்.ரா.ராகவையங்கார் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X