பொது செய்தி

இந்தியா

பி.எம்.டி.சி.,யின் குளிர்சாதன வால்வோ பஸ்களை இயக்க உத்தரவு

Added : செப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : கொரோனாவால் ஓராண்டாக டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ள பி.எம்.டி.சி.,யின் குளிர்சாதன வால்வோ பஸ்களை இயக்க, அந்த அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தயங்குகிறது.பெங்களூரில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததால், கடந்த ஆண்டு பி.எம்.டி.சி., பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொற்று குறைந்த பின், வழக்கம் போல அரசு பஸ் போக்குவரத்தை துவங்க அனுமதியளித்துள்ளது. இதையடுத்து பி.எம்.டி.சி.,
பி.எம்.டி.சி.,யின் குளிர்சாதன வால்வோ பஸ்களை இயக்க உத்தரவு

பெங்களூரு : கொரோனாவால் ஓராண்டாக டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ள பி.எம்.டி.சி.,யின் குளிர்சாதன வால்வோ பஸ்களை இயக்க, அந்த அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தயங்குகிறது.

பெங்களூரில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததால், கடந்த ஆண்டு பி.எம்.டி.சி., பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொற்று குறைந்த பின், வழக்கம் போல அரசு பஸ் போக்குவரத்தை துவங்க அனுமதியளித்துள்ளது. இதையடுத்து பி.எம்.டி.சி., பயணியர் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, தினமும் 4,000 முதல் 4,500 சாதாரண பஸ்களே இயக்கப்படுகின்றன.பி.எம்.டி.சி., வசம் 850 வால்வோ பஸ்கள் உள்ள நிலையில், 50 பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. முக்கியமான பாதைகளில் மட்டும் அவை இயங்குகின்றன.மற்றவை டிப்போவில் துாசி படிந்து நிற்கின்றன. பயணியர் எண்ணிக்கை அதிகரித்தால், இந்த குளிர்சாதன பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது.

ஆனால் கொரோனா பீதி இன்னும் குறையாததால், முழுவதும் மூடப்பட்ட இந்த வால்வோ பஸ்களில் பயணிக்க பலரும் தயங்குகின்றனர்.கொரோனா காலமாக இருப்பதால், பெங்களூரின் பெரும்பாலான ஐ.டி., நிறுவனங்களின் ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றுகின்றனர்; பல நிறுவனங்கள் இதை நிரந்தரமாக்கியுள்ளன.வர்த்தக நடவடிக்கைகளும், இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதனால் இந்த அதிநவீன பஸ்களுக்கு தேவைஇல்லை.சாதாரண பஸ்களை விட இந்த பஸ்களில் கட்டணம் அதிகம் என்பதால், பயணியர் குறைவாக உள்ள

இந்த நேரத்தில், இந்த பஸ்களை இயக்கினால், பி.எம்.டி.சி., பொருளாதார சுமை மேலும் அதிகரிக்கும். இதை மனதில் வைத்தே, விலை அதிகமுள்ள, இந்த சொகுசு பஸ்களை முழுமையான அளவில் இயக்க பி.எம்.டி.சி., தயங்குகிறது.பி.எம்.டி.சி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த பஸ்களுக்கு நிர்வகிப்பு செலவு அதிகம். இந்த பஸ்களை மட்டுமே இயக்கிய 1,500 ஓட்டுனர்கள், தற்காலிகமாக வேறு பஸ்கபிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இன்னும் ஓராண்டு வரை, வால்வோ பஸ்கள் சாலையில் இறங்குவது சந்தேகமே.ஓராண்டுக்கு மேலாக ஒரே இடத்திலேயே நிற்பதால், பஸ்களில் தொழில்நுட்ப பழுதுகள் ஏற்பட்டுள்ளன; பல பஸ்களின் சக்கரம் பாழாகியுள்ளது; இன்ஜின்கள் பழுதடைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X