பொது செய்தி

இந்தியா

ம.ஜ.த. லிருந்து வருபவர்களுக்கு தேர்தலில் நிற்க சீட் கொடுக்க முடிவு

Added : செப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : ம.ஜ.த.,விலிருந்து விலகி காங்கிரசில் சேரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, அடுத்த சட்டசபை தேர்தலில் 'சீட்' கொடுக்க முடிவு செய்துள்ள மாநில தலைவர் சிவகுமார் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முடிவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களான மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதியின் ஜி.டி.தேவகவுடா, கோலாரின் சீனிவாச கவுடா

பெங்களூரு : ம.ஜ.த.,விலிருந்து விலகி காங்கிரசில் சேரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, அடுத்த சட்டசபை தேர்தலில் 'சீட்' கொடுக்க முடிவு செய்துள்ள மாநில தலைவர் சிவகுமார் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முடிவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களான மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதியின் ஜி.டி.தேவகவுடா, கோலாரின் சீனிவாச கவுடா ஆகியோர் மனதளவில் ம.ஜ.த.,வை விட்டு விலகி விட்டனர். தேவகவுடா, காங்கிரசில் சேருவதாக அறிவித்துவிட்டார்.பதவி ராஜினாமா அதுபோல, ஹுப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி தேர்தலில் ம.ஜ.த., தோல்வியடைந்ததை அடுத்து, அதற்கு பொறுப்பேற்ற எம்.எல்.ஏ., கோனரெட்டி, தன் தேசிய முதன்மை செயலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனினும் அவர், காங்கிரசில் இணைந்து, அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், ம.ஜ.த.,விலிருந்து விலகி, காங்கிரசில் சேரும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு, அடுத்த சட்டசபை தேர்தலில் அவர்களின் தற்போதைய தொகுதியில் போட்டியிட சீட் வழங்க, கட்சியின் மாநில தலைவர் சிவகுமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதையறிந்த, முன்னாள் மத்திய அமைச்சர் முனியப்பா, முன்னாள் அமைச்சர் நசீர் அகமது, கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், சிவகுமாரை சந்தித்தனர்.எதிர்ப்பு அப்போது, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சீனிவாச கவுடா, எம்.எல்.சி., மனோகரை காங்கிரசில் சேர்ப்பதற்கு, மைசூரு, துமகூரு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்விஷயத்தை மேலிடத்துக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.ஆனால் காங்கிரசோ, ஹொஸ்கோட்டில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில், எம்.டி.பி.நாகராஜை தோற்கடித்த, பா.ஜ., போட்டி வேட்பாளர் சரத் பச்சே கவுடாவை, தங்கள் கட்சியில் இணைய வைத்துள்ளனர்.மைசூரு பகுதியில் காங்கிரசை பலப்படுத்தும் வகையில் ஜி.டி.தேவகவுடா, குப்பி சீனிவாசை கட்சியில் இணைக்கிறது.

அடுத்து குப்பி வாசு, எம்.எல்.சி.,க்கள் பெமல் காந்தராஜ், மனோகரை கட்சியில் இணைக்க முயற்சி நடந்து வருகிறது. 'ஆப்பரேஷன் கை'இரண்டாவது கட்டமாக, 'ஆப்பரேஷன் கை' திட்டத்தின் மூலம், 2022 ஏப்ரக்குள் பா.ஜ., - ம.ஜ.த.,வின் 10 எம்.எல்.ஏ.,க்களை காங்கிரசுக்கு இழுக்க பட்டியல் தயாரித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X