பொது செய்தி

இந்தியா

தட்டச்சில் எழுத்து பிழை; முதல்வருக்கு தர்மசங்கடம்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சிம்லா-ஹிமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் தொடர்புத்துறை தட்டச்சில் செய்த எழுத்து பிழையால், முதல்வருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. ஹிமாச்சலில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பா.ஜ., ஆட்சி நடக்கும் கர்நாடகா, குஜராத், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் முதல்வர்கள் மாற்றப்பட்டனர். இதையடுதது ஹிமாச்சலிலும் முதல்வர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக

சிம்லா-ஹிமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் தொடர்புத்துறை தட்டச்சில் செய்த எழுத்து பிழையால், முதல்வருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. ஹிமாச்சலில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பா.ஜ., ஆட்சி நடக்கும் கர்நாடகா, குஜராத், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் முதல்வர்கள் மாற்றப்பட்டனர். இதையடுதது ஹிமாச்சலிலும் முதல்வர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநிலத்தில் வதந்தி பரவியுள்ளது.



latest tamil news



இந்நிலையில் மாநில மக்கள் தொடர்புத்துறை 'டுவிட்டரில்' சமீபத்தில் வெளியிட்ட பதிவில், 'முதல்வர் பெயரை ஜெய்ராம் என்பதற்கு பதில் 'ஜாவோ ராம்' என ஹிந்தியில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. ஹிந்தியில் ‛ஜாவோ' என்றால், செல்கிறார் என அர்த்தம். இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்குர் மாற்றப்பட போவதாக தகவல் வெளியானது. தவறை உணர்ந்த மக்கள் தொடர்புத்துறை, உடனடியாக தவறை திருத்தம் செய்தது.


latest tamil news



இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் குல்தீப் ரத்தோர் கூறுகையில், ''இது எதேச்சையாக நடந்த தவறாக இருக்கலாம். ஆனால் நடக்கப்போவது தான் வெளியாகியுள்ளது. முதல்வர் ஜெய்ராம் தாக்குர் விரைவில் மாற்றப்பட போவது உண்மை,'' என்றார். ஆனால் இதை பா.ஜ., மறுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
20-செப்-202114:52:11 IST Report Abuse
sankar அழகிய குமரி beautiful lass என்பதற்கு பதில் beautiful ass என்று ஒருவர் தவறாக type செய்துவிட்டார். அர்த்தமே மாறிவிட்டது. சரியாக படிக்காமல் அனுப்பினால் எஸ். வீ. சேகர் மாதிரி மாட்டிகொள்ள வேண்டியது தான்.
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
20-செப்-202110:31:11 IST Report Abuse
RandharGuy பாஜகவுக்கு இது சகஜம் எல் முருகன் எக்சாம்ப்லே
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-செப்-202108:09:13 IST Report Abuse
duruvasar அப்படி பார்த்தால் ஸ்டால் என்றால் நிறுத்து என்ற பொருள் உண்டு. இதெல்லாம் மேட்டருங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X