பொது செய்தி

இந்தியா

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை

Added : செப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : ஒரே குடும்பத்தின் நான்கு பேர் தற்கொலை மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் பல ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.பெங்களூரு பேட்ரஹள்ளி திகளரபாளையாவில் வசிக்கும் பத்திரிகையாளர் சங்கரின், 55, மனைவி பாரதி, 50, மகன் மது சாகர், 27, மகள்கள் சிஞ்சனா, 33, சிந்துராணி, 30, சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டனர்.இவர்கள் இறப்பதற்கு முன், 9 மாத ஆண்

பெங்களூரு : ஒரே குடும்பத்தின் நான்கு பேர் தற்கொலை மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் பல ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

பெங்களூரு பேட்ரஹள்ளி திகளரபாளையாவில் வசிக்கும் பத்திரிகையாளர் சங்கரின், 55, மனைவி பாரதி, 50, மகன் மது சாகர், 27, மகள்கள் சிஞ்சனா, 33, சிந்துராணி, 30, சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டனர்.இவர்கள் இறப்பதற்கு முன், 9 மாத ஆண் குழந்தையை கொன்றுள்ளனர்; 3 வயது பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. இந்த நுாதன வழக்கை, பேட்ரஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றம் நடந்த வீட்டில், சாட்சி, ஆதாரங்களை சேகரிப்பதற்காக, வீடியோ, போட்டோகிராபருடன் போலீசார் நேற்று சென்றனர்.

அப்போது, 'வீட்டில் பணம், தங்க நகைகள் உள்ளன. சோதனையிடும் போது, தங்களின் மருமகன்கள் பிரவீன், ஸ்ரீகாந்த் மற்றும் இரண்டு நண்பர்கள் உடனிருக்க வேண்டும்' என டி.சி.பி., சஞ்சீவ் பாட்டீலிடம், வாரிசுகளை பறிகொடுத்த சங்கர் வேண்டுகோள் விடுத்தார். எனவே அவர்களின் முன்னிலையில் சோதனை நடந்தது.அப்போது சிஞ்சனா, சிந்துராணி, மதுசாகர் அறைகளில் தனித்தனி கடிதங்கள் கிடைத்தன.வீட்டில் 1 கிலோ தங்கநகைகள், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நோட்டு கட்டுகள் கிடைத்தன. பல இடங்களில் ரூபாய் நோட்டுகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன.

மகள்கள், மகன் எழுதிய கடிதங்களில், 'எங்களின் இறப்புக்கு, தந்தையே காரணம். அவரது கள்ளத்தொடர்பால், எங்களுக்கு ஏராளமான தொந்தரவு ஏற்பட்டது' என கூறி, அதை விவரித்துள்ளதாக தெரிகிறது.இந்த கடிதங்களின் விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தன் குடும்பமே இறந்த நிலையிலும், பணம், தங்க நகைகள் மீது சங்கர் காண்பித்த ஆர்வம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, அவரிடம் முறையாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X