2020ல் 1.20 லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலி| Dinamalar

2020ல் 1.20 லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலி

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (10)
Share
புதுடில்லி-கடந்த ஆண்டில் நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.இதன்படி தினசரி பலி எண்ணிக்கை 328 ஆக உள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.கடந்த ஆண்டு மட்டும் நம் நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். தினசரி

புதுடில்லி-கடந்த ஆண்டில் நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.



latest tamil news


இதன்படி தினசரி பலி எண்ணிக்கை 328 ஆக உள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் நம் நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். தினசரி உயிரிழப்பு 328 ஆக உள்ளது.சாலை விபத்து உயிரிழப்புகள் 2019ம் ஆண்டில் 1.36 லட்சமாகவும், அதற்கு முந்தைய ஆண்டில் 1.35 லட்சமாகவும் பதிவானது. இதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துகளில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 3.92 லட்சமாக இருக்கிறது.


latest tamil news


அதேபோல் சாலையில் விபத்திற்கு பின் வானகங்களை நிறுத்தாமல் சென்றது தொடர்பாக கடந்த ஆண்டு 41 ஆயிரத்து 196 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவசரம் மற்றும் கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதால் காயம் ஏற்படுத்தியதாக கடந்த ஆண்டு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 1.30 லட்சமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X