பொது செய்தி

தமிழ்நாடு

'சீரியல்' பார்த்து சீரழிய வேண்டாம்! சித்த மருத்துவர் 'சீரியஸ் அட்வைஸ்'

Added : செப் 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:''கொரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்ப, மனதையும் உடலையும் பதற்றமில்லாமல் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு'டிவி' சீரியல் பார்ப்பதை தவிர்த்தாலே போதும்,'' என, சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.சென்னை, தி.நகர் 'விதை' பாரம்பரிய மளிகை பொருள் விற்பனையகத்தின், 10ம் ஆண்டு விழா நடந்தது.கஷாயம்அதில் பங்கேற்ற சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசியதாவது:நாம்
 'சீரியல்' பார்த்து சீரழிய வேண்டாம்! சித்த மருத்துவர் 'சீரியஸ் அட்வைஸ்'

சென்னை:''கொரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்ப, மனதையும் உடலையும் பதற்றமில்லாமல் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு'டிவி' சீரியல் பார்ப்பதை தவிர்த்தாலே போதும்,'' என, சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.

சென்னை, தி.நகர் 'விதை' பாரம்பரிய மளிகை பொருள் விற்பனையகத்தின், 10ம் ஆண்டு விழா நடந்தது.


கஷாயம்

அதில் பங்கேற்ற சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசியதாவது:நாம் நலமாக இருக்க வேண்டும் என்றால், பூமிக்கு கீழ் உள்ள மண் புழுக்கள் துவங்கி, கண்ணுக்கு தெரியாத உயிரிகளும் நலமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான், நாம் நலமாக இருக்கிறோம் என்று அர்த்தம். கொரோனா இரண்டு அலைகளும், நமக்கு கற்றுக்கொடுத்த பாடம், உடலையும், மனதையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.அதை உணர்ந்து ஏற்றுக்கொண்டதால் தான், தற்போது மூன்றாவது அலையையும் வெற்றிகரமாக கடந்து கொண்டு இருக்கிறோம்.

முதல் அலையின் போது, நாம் எடுத்துக்கொண்ட கபசுர குடிநீரை, அப்போது ஏளனமாக பார்த்தவர்களும், பேசியவர்களும், இப்போது கேட்டு கேட்டு வாங்கி அருந்துகின்றனர்.இன்னும் மூன்று மாதங்களில், இந்த கொரோனா நம்மை விட்டு முற்றிலும் ஒழிந்து விடும் அல்லது வலுவிழந்து விடும். ஆனால், அதற்கு பின், நம்மை குறிவைத்து 6 லட்சத்திற்கும் அதிகமான நோய்க்கிருமிகள் வரக் காத்திருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அவற்றையும் வெல்லும் வல்லமை நமக்கு உண்டு.

அதற்கான மருந்தை தேடி எங்கும் போக வேண்டாம். வீட்டில் உள்ள பெரியோரிடம் கேளுங்கள்; ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு கஷாயம் கொடுத்து சரி செய்துவிடுவர்.உறுதுணைரசாயனம் கலக்காத சிறு தானியங்களை, ஒரு நாளின் முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை விட்டுவிடுங்கள். மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான அரிசி ரகங்கள் உள்ளன. அவற்றை சாப்பிட்டு பழகுங்கள், உடற்பயிற்சி அல்லது யோகாவை வாழ்க்கையின் தினசரி அலுவலாக கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.

மனதை பதற்றமில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள்.அதற்கு வேறு எதுவும் செய்ய வேண்டாம். 'டிவி' சீரியல் பார்ப்பதை விட்டாலே போதும். 'இந்த 'டிவி' சீரியலில் இப்படி ஒரு நல்ல விஷயம் இருக்கிறது' என, எந்த 'டிவி' சீரியலையும் சொல்ல முடியாது; அப்புறம் அதை ஏன் பார்க்க வேண்டும்.எந்த வீட்டிலாவது, இரவு 9:00 மணிக்கு சரிகை புடவையும், முழு 'மேக் அப்'பும், ரத்த சிவப்பில் 'லிப்ஸ்டிக்'கும் பூசி பெண்கள் புறம் பேசுவார்களா; 'டிவி'யில் வருவோர் பேசுவர்.

இந்த சீரியல்களை பார்க்காமல் இருந்தாலே, நம் மனம் பாதி சரியாகிவிடும், பின் மீதியை சரிசெய்வது வெகு சுலபம்.நமது பேரன், பேத்திகள் என, நம் சந்ததியர் வாழையடி வாழையாக வாழ, இந்த பூமியை பத்திரமாக அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதற்கு, இயற்கை சார்ந்த எளிமையான வாழ்க்கை பெரிதும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, 'விதை' நிறுவன நிர்வாகி அருண் ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
23-செப்-202115:20:18 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy நல்ல பல குடும்பங்கள் டிவி பார்ப்பது இல்லை. மனம் சம்பந்தமான தியானம் உடல் சம்பந்தமான உடல்பயிற்சி ஒருநாள் செய்ய நேரம் இருக்கிறதா என யோசியுங்கள். குருவிகளுக்கு உணவு தண்ணீர் கொடுங்கள் மரத்திக்கு தண்ணீர் ஊற்றுங்கள் டிவி க்கு நேரம் கிடைக்காது
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
22-செப்-202121:30:33 IST Report Abuse
THINAKAREN KARAMANI பெண்கள்மனம் டென்ஷன் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் மிகவும் மகிழ்வாக இருக்கும். அந்த டென்ஷன் வராமல் இருக்கவேண்டுமென்றால் கண்டிப்பாக TV -யில் எந்த சீரியலும் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் கூறுவது மிகவும் நல்லதொரு அறிவுரை. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
padmanabhan - coimabatore,இந்தியா
20-செப்-202120:04:04 IST Report Abuse
padmanabhan It is true
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X