பொது செய்தி

தமிழ்நாடு

சிவாச்சாரியார் சமூக நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை:அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சிவாச்சாரியார் சமூக நலச்சங்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, சிவாச்சாரியார் சமூக நல சங்கத்தின் நிறுவன தலைவர் சுரேஷ் பேசியதாவது:தமிழகத்தில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை ரத்து
 சிவாச்சாரியார் சமூக நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை:அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சிவாச்சாரியார் சமூக நலச்சங்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, சிவாச்சாரியார் சமூக நல சங்கத்தின் நிறுவன தலைவர் சுரேஷ் பேசியதாவது:தமிழகத்தில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆகம விதிகளை மீறாமல், பாரம்பரிய முறைப்படி ஆலயங்களில் பூஜைகள் நடைபெற வேண்டும்.வேத ஆகமங்களை முறைப்படி படித்த சிவாச்சாரியார்களை, பூஜை செய்ய பணியமர்த்த வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை, ஆகம பூஜைகளிலும், பாரம்பரிய பூஜைகளிலும் தலையிட கூடாது.மத வழிபாடுகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற, அரசியல் அமைப்பு சட்டத்தை, தமிழக அரசு மதித்து நடக்க வேண்டும். ஆலயங்களில் பூஜை செய்பவர்களுக்கு, மன்னர் காலத்தில் இருந்தே வயது வரம்பு கிடையாது. இதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், சிவாச்சாரியார்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X