பொது செய்தி

தமிழ்நாடு

அயோத்தி ராமர் கோவிலுக்கு 3 கிலோ வெள்ளி செங்கல்

Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு, கூனம்பட்டி ஆதீனத்தில் இருந்து, 3 கிலோ வெள்ளி செங்கல் வழங்கப்பட்டது.ஹிந்து தர்ம சம்ரக் ஷண சம்மேளனக் குழு சார்பில், திருப்பூர் அடுத்த பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி ஆதீனம் மாணிக்கவாசகர் திருமடாலய வளாகத்தில், நேற்று முப்பெரும் விழா நடந்தது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி தலைமை வகித்தார். சமூக
 அயோத்தி ராமர் கோவிலுக்கு 3 கிலோ வெள்ளி செங்கல்

திருப்பூர்:அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு, கூனம்பட்டி ஆதீனத்தில் இருந்து, 3 கிலோ வெள்ளி செங்கல் வழங்கப்பட்டது.ஹிந்து தர்ம சம்ரக் ஷண சம்மேளனக் குழு சார்பில், திருப்பூர் அடுத்த பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி ஆதீனம் மாணிக்கவாசகர் திருமடாலய வளாகத்தில், நேற்று முப்பெரும் விழா நடந்தது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி தலைமை வகித்தார். சமூக நலன் வேண்டி ஸ்ரீருத்ர யாகம் நடந்தது.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் தமிழக அரசின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தும் விதமாகவும், சமூக நலன் காக்கும் வகையிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் அறவழி போராட்டம் துவங்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலுக்கு மூன்று கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கலை, கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி வழங்க, ஆர்.எஸ்.எஸ்., சூலுார் ஒன்றிய தலைவர் சம்பத்குமார், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பெற்றுக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
25-செப்-202110:27:41 IST Report Abuse
Vaiyapuri Rajendran அயோத்தியில் ஶ்ரீ ராமர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்து அனைவரும் பயன் பெற வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X