பொது செய்தி

தமிழ்நாடு

கேரள துறைமுகத்திற்கு பாறைகள் இரு மாநில அமைச்சர்கள் பேச்சு

Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை:கேரளாவில் அமையவுள்ள துறைமுகத்திற்கு தேவையான பாறைகளை, தமிழகத்தில் இருந்து அனுப்புவது குறித்து, இருமாநில அமைச்சர்கள் சென்னையில் பேச்சு நடத்தினர்.கேரள மாநில சிறு துறைமுகங்கள் அமைச்சகம் வாயிலாக, திருவனந்தபுரம் அருகே, புதிதாக துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தின் கட்டுமான பணிகளுக்கு பெரிய பாறைகள் தேவை. அத்தகைய பாறைகள் கேரளாவில் இல்லை.

சென்னை:கேரளாவில் அமையவுள்ள துறைமுகத்திற்கு தேவையான பாறைகளை, தமிழகத்தில் இருந்து அனுப்புவது குறித்து, இருமாநில அமைச்சர்கள் சென்னையில் பேச்சு நடத்தினர்.கேரள மாநில சிறு துறைமுகங்கள் அமைச்சகம் வாயிலாக, திருவனந்தபுரம் அருகே, புதிதாக துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தின் கட்டுமான பணிகளுக்கு பெரிய பாறைகள் தேவை. அத்தகைய பாறைகள் கேரளாவில் இல்லை. எனவே, தமிழகத்தில் இருந்து பாறைகளை வாங்க கேரளா முடிவெடுத்துள்ளது.இதுதொடர்பாக, கேரளா மாநில சிறுதுறைமுகங்கள் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அஹமது, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வேலுவை, தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.இந்த சந்திப்புக்கு பின், அமைச்சர் வேலு கூறியதாவது:கேரளாவில் புதிதாக துறைமுகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. ஆழ்கடல் பகுதியில் இந்த துறைமுகம் அமைவதால், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, அங்கு பொருட்களை எளிதாக எடுத்து செல்ல முடியும்.சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி, பயணியர் போக்குவரத்துக்கும் வசதியாக இருக்கும். இப்பணிகளுக்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஆழமான பகுதியில் துறைமுகம் அமைவதால், அதற்கு தேவையான பாறைகள் தங்களிடம் இல்லை. தமிழகத்தில் இருந்து வழங்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் கடிதம் கொடுத்துள்ளார். இந்தக் கடிதத்தை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய பதில் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.கேரள அமைச்சர் அஹமது கூறியதாவது:எங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிப்பதாக கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கீழடி அகழாய்வில், தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை கண்டெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு, கேரள அரசு உறுதுணையாகவும், தேவையான ஒத்துழைப்பும் வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X