பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: நீங்கள் யார் தெரியுமா?

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:நண்பர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் அரசியலில் எதிரும், புதிருமாக மாறியதுடன் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதை தவிர்த்து விடுவர். தவிர்க்க முடியாத பட்சத்தில், நேருக்கு நேர் சந்தித்தால் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

நண்பர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் அரசியலில் எதிரும், புதிருமாக மாறியதுடன் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதை தவிர்த்து விடுவர். தவிர்க்க முடியாத பட்சத்தில், நேருக்கு நேர் சந்தித்தால் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து கொள்வர்.அதே போல கருணாநிதியும், ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்க காவல் துறையினர் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்வர். அதையும் மீறி, இருவரும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், ஒருவருக்கொருவர் சிரித்தப்படி மரியாதை செய்து கொள்வர்.இது தான் தமிழக அரசியல் வட்டாரத்தில் நடைமுறையில் உள்ள நாகரிக பண்பு.latest tamil news


அ.தி.மு.க., அவை தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரை சந்திக்க சசிகலா வந்தார். அப்போது அங்கே இருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி வேகமாக புறப்பட்டு வெளியே சென்று விட்டார்.மதுசூதனன் மறைந்தவுடன் இறுதி அஞ்சலி செலுத்த வந்தார், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின். அவரது பக்கத்தில் அமர்ந்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்களான பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பேசினர்.அஞ்சலி செலுத்த சசிகலா வந்ததும், இருவரும் அங்கிருந்து வெளியேறினர். சசிகலா சென்ற பின், மீண்டும் வந்தனர்.பன்னீர்செல்வத்தின் மனைவி சீதாலட்சுமி மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த ஸ்டாலினும், பழனிசாமியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டனர். அதே நேரத்தில் சசிகலா வந்தபோது, பழனிசாமி மறைந்து விட்டார். சசிகலா சென்ற பின் வெளியில் வருகிறார்.

'சசிகலாவை கண்டால் பழனிசாமி தலைமறைவாகி விடுகிறார்' என, சமூகவலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர். இது, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அழகல்ல.சசிகலா எதிரில் கூட நிற்க முடியாமல், பன்னீர்செல்வமும், பழனிசாமியும் அஞ்சுவது ஏன்?'நான் தான், அ.தி.மு.க., பொது செயலர்' என இருவரிடமும் சசிகலா சண்டை போடுவாரா? இவர்களிடையே வாய்க்கால் வரப்பு தகராறா? கொடுக்கல், வாங்கல் பிரச்சனையா?அப்படியே ஏதாவது இருந்தாலும், பொது இடத்தில் சண்டை போடும் அளவிற்கா நாகரிகம் இல்லாமல் உள்ளனர். அவர்களிடையே உள்ளது அ.தி.மு.க., பொது செயலர் குறித்த பிரச்னை தானே? அதற்கான தீர்ப்பை, நீதிமன்றம் சொல்லப் போகிறது. அப்புறம் ஏன் இந்த ஒளிவு மறைவு?


latest tamil news


ஒரு வேளை, சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு திடீரென சசிகலா வந்தால், இருவரும் வெளியேறி விடுவரா?சசிகலாவை பார்த்து மறைந்து கொள்வதற்கு பன்னீர்செல்வமும், பழனிசாமியும் அ.தி.மு.க.,வின் வட்ட செயலர்கள் அல்ல... இருவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள்; தற்போது அ.தி.மு.க.,வை வழிநடத்தும் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-செப்-202101:31:38 IST Report Abuse
DARMHAR sasikalaa is a a virus in in tamil nadu politics.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-செப்-202101:31:38 IST Report Abuse
DARMHAR Please don't repeat the same comment
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
20-செப்-202123:40:49 IST Report Abuse
Aarkay ஜெ வீட்டு ஆயாவை பார்க்க விருப்பமில்லாமல் இருக்கலாம். இதை பெரிதுபடுத்த தேவையில்லை. வேலைக்கார ஆயாவுக்கு ஸ்டாலின் ஆயிரம் மடங்கு மேல் கலர் கலரா கனவெல்லாம் கண்டார்கள். என்ன ட்ரெஸ்ஸிங் ஸ்டைல்... இவர்களுக்கு இவர்களே போன் செய்துகொள்வார்களாம். எப்போமா வருவீங்கன்னு கேப்பாங்களாம். நாலாப்பு படிச்ச ஆயாவெல்லாம் நாடாண்டால், கடவுள்தான் நாட்டை காப்பாற்றவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X