பொது செய்தி

இந்தியா

பெங்களூரு மாநகராட்சி, இலவச உதவி எண்

Added : செப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : கொரோனா உட்பட, மாநகராட்சி சம்பந்தப்பட்ட எந்த பிரச்னைக்கும், தீர்வு காண பெங்களூரு மாநகராட்சி, இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவ துவங்கிய போது, அதை கட்டுப்படுத்த, மாநகராட்சி சார்பில், உதவி எண் 1912 திறக்கப்பட்டது. கொரோனா குறைந்து வருவதால், இந்த உதவி எண் துண்டிக்கப்பட்டது.தற்போது பொது மக்களின் வசதிக்காக,

பெங்களூரு : கொரோனா உட்பட, மாநகராட்சி சம்பந்தப்பட்ட எந்த பிரச்னைக்கும், தீர்வு காண பெங்களூரு மாநகராட்சி, இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவ துவங்கிய போது, அதை கட்டுப்படுத்த, மாநகராட்சி சார்பில், உதவி எண் 1912 திறக்கப்பட்டது. கொரோனா குறைந்து வருவதால், இந்த உதவி எண் துண்டிக்கப்பட்டது.தற்போது பொது மக்களின் வசதிக்காக, தினமும் 24 மணி நேரம் செயல்படும் உதவி எண் 1533 துவங்கப்பட்டுள்ளது.கொரோனா பிரச்னைகள்,

மாநகராட்சி தொடர்பான புகார்கள், தகவல்களுக்கு இப்புதிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.கொரோனா தடுப்பூசி மையங்கள், சிகிச்சை மையங்கள், படுக்கை வசதி, பராமரிப்பு மையம் உட்பட அனைத்து தகவல்களையும் பெறலாம்.பயனாளிகளின் ஒவ்வொரு அழைப்புக்கும், 'டிக்கெட்' எண் வழங்கப்படும்; விபரங்கள் பதிவாகும். அழைப்பு விடுத்த நேரம், பயனாளிகள் கூறும் தகவல்கள், மென்பொருளில் பதிவாகும். பிரச்னை முடிந்த பின், அந்நபரின் டிக்கெட் எண் செயலிழக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X