பொது செய்தி

இந்தியா

எதிர்கட்சிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்; முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Added : செப் 20, 2021
Share
Advertisement
தாவணகரே : ''எந்த காரணத்துக்காகவும், எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கிறது என்ற எண்ணத்தில் இருப்பதை விட்டு, கட்சியை பலப்படுத்த வேண்டும்,'' என முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவுறுத்தினார்.தாவணகரேவின் திரிஷூல் கலாபவனில், நேற்று நடந்த மாநில பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், எடியூரப்பா பேசியதாவது:பா.ஜ., அமைச்சர்களை காங்கிரசார்

தாவணகரே : ''எந்த காரணத்துக்காகவும், எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கிறது என்ற எண்ணத்தில் இருப்பதை விட்டு, கட்சியை பலப்படுத்த வேண்டும்,'' என முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவுறுத்தினார்.

தாவணகரேவின் திரிஷூல் கலாபவனில், நேற்று நடந்த மாநில பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், எடியூரப்பா பேசியதாவது:பா.ஜ., அமைச்சர்களை காங்கிரசார் சிலர் ரகசியமாக தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது.அடுத்தாண்டு தேர்தல் ஆண்டாகும். தொண்டர்கள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராக வேண்டும்.லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அலையில் வெற்றி பெறலாம். ஆனால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது சவாலாகவுள்ளது. வெற்றி பெறுவோம் என்ற மனப்பிரம்மை வேண்டாம். எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம். கட்சியை பலப்படுத்துங்கள்.வீடு வீடாக சென்று, மாநில பா.ஜ., அரசின் சாதனைகளை விவரிக்க வேண்டும். கட்சியை பலப்படுத்த வரும் மாதம் முதல் மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்வோம்.தொண்டர்கள், தலைவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அடுத்த தேர்தலில், நாம் 140 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சிக்கு வருவோம். எஸ்.சி., - எஸ்.டி., யுவ மோர்ச்சா, மகளிர் அமைப்பினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.நான் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து சர்ச்சை நடக்கிறது. நான் ஒருவன் மட்டுமே, சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. என்னோடு எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரும் வருவர்.ஒற்றுமையாக கட்சியை பலப்படுத்துவதன் மூலம், காங்கிரசுக்கு பாடம் புகட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X